வாசகங்கள்
10 ஜனவரி, 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
1 சாமுவேல் 1: 1-8
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 116: 12-13, 14-16, 18-19
12⁽ஆண்டவர் எனக்குச் செய்த␢ எல்லா நன்மைகளுக்காகவும்␢ நான் அவருக்கு␢ என்ன கைம்மாறு செய்வேன்?⁾
13⁽மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,␢ ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.⁾
14⁽இதோ! ஆண்டவருடைய மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ அவருக்கு என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾
15⁽ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு␢ அவரது பார்வையில்␢ மிக மதிப்புக்குரியது.⁾
16⁽ஆண்டவரே! நான் உண்மையாகவே␢ உம் ஊழியன்; நான் உம் பணியாள்;␢ உம் அடியாளின் மகன்;␢ என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.⁾
18⁽இப்பொழுதே உம் மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;⁾
19⁽உமது இல்லத்தில் முற்றங்களில்,␢ எருசலேமின் நடுவில்,␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.␢ அல்லேலூயா!⁾
Alleluia
மாற்கு 1: 15
15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
Gospel
மாற்கு 1: 14-20
14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.
15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
16அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
17இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.
18உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
19பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
20உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.