ஜனவரி 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

26 ஜனவரி, 2028

Timothy and Titus, Bishops Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

2 திமொத்தேயு 1: 1-8 or Titus 1: 1-5

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 96: 1-2a, 2b-3, 7-8a, 10

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾ 2⁽ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;␢ அவர் பெயரை வாழ்த்துங்கள்;␢ அவர் தரும் மீட்பை␢ நாள்தோறும் அறிவியுங்கள்.⁾ 3⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾ 7⁽மக்களினங்களின் குடும்பங்களே,␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;␢ மாட்சியையும் ஆற்றலையும்␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.⁾ 8⁽ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை␢ அவருக்குச் சாற்றுங்கள்;␢ உணவுப்படையல் ஏந்தி அவர்தம்␢ கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.⁾ 10⁽வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;␢ ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகு உறுதியாக␢ நிலைநிறுத்தப்பட்டுள்ளது;␢ அது அசைவுறாது;␢ அவர் மக்களினங்களை␢ நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.⁾
Gospel

மாற்கு 4: 1-20

1அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். 2அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது; 3“இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. 5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. 6ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. 7மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. 8ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. 9கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” 10அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள். 11அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. 12எனவே, அவர்கள் ⁽‘ஒருபோதும் மனம் மாறி␢ மன்னிப்புப் பெறாதபடி␢ கண்ணால் தொடர்ந்து பார்த்தும்␢ கண்டு கொள்ளாமலும்␢ காதால் தொடர்ந்து கேட்டும்␢ கருத்தில் கொள்ளாமலும்␢ இருப்பார்கள்’”⁾ என்று கூறினார். 13மேலும், அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? 14விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். 15வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால், அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். 16பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். 17ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். 18முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் 19இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள். 20நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.