ஜனவரி 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

12 ஜனவரி, 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

1 சாமுவேல் 3: 1-10, 19-20

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 40: 2 and 5, 7-8a, 8b-9, 10

2⁽அழிவின் குழியிலிருந்து␢ என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;␢ சேறு நிறைந்த பள்ளத்தினின்று␢ தூக்கியெடுத்தார்;␢ கற்பாறையின்மேல் நான்␢ காலூன்றி நிற்கச் செய்தார்;␢ என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.⁾ 5⁽ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை␢ நீர் எமக்கெனச் செய்துள்ளீர்;␢ உமக்கு நிகரானவர் எவரும் இலர்;␢ என் கடவுளே!␢ உம் அருஞ்செயல்களும்␢ திட்டங்களும் எங்களுக்காகவே;␢ அவற்றை நான் எடுத்துரைக்க␢ விரும்புவேனாகில்␢ அவை எண்ணிலடங்கா.⁾ 7⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾ 8⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾ 9⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾ 10⁽உமது நீதியை நான்␢ என் உள்ளத்தின் ஆழத்தில்␢ மறைத்து வைக்கவில்லை;␢ உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்␢ நீர் அருளும் மீட்பைப் பற்றியும்␢ கூறியிருக்கின்றேன்;␢ உம் பேரன்பையும் உண்மையையும்␢ மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.⁾
Alleluia

யோவான் 10: 27

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel

மாற்கு 1: 29-39

29பின்பு, அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். 30சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். 31இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.⒫ 32மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். 33நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. 34பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. 35இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். 36சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். 37அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். 38அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். 39பின்பு, அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.