பிப்ரவரி 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
272829
இன்றுக்கு

வாசகங்கள்

6 பிப்ரவரி, 2028

Fifth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

எசாயா 6: 1-2a, 3-8

1உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. 2அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர். 3⁽அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:␢ “படைகளின் ஆண்டவர்␢ தூயவர், தூயவர், தூயவர்;␢ மண்ணுலகம் முழுவதும் அவரது␢ மாட்சியால் நிறைந்துள்ளது” என்று␢ உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.⁾ 4⁽கூறியவரின் குரல் ஒலியால்␢ வாயில் நிலைகளின் அடித்தளங்கள்␢ அசைந்தன;␢ கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.⁾ 5அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன். 6அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். 7அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார். 8மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 138: 1-2ab, 2cd-3, 4-5, 7c-8

1⁽ஆண்டவரே!␢ என் முழுமனத்துடன்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ தெய்வங்கள் முன்னிலையில்␢ உம்மைப் புகழ்வேன்.⁾ 2⁽உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி␢ உம்மைத் தாள் பணிவேன்;␢ உம் பேரன்பையும்␢ உண்மையையும் முன்னிட்டு␢ உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;␢ ஏனெனில், அனைத்திற்கும் மேலாக␢ உம் பெயரையும் உம் வாக்கையும்␢ மேன்மையுறச் செய்துள்ளீர்.⁾ 3⁽நான் மன்றாடிய நாளில்␢ எனக்குச் செவிசாய்த்தீர்;␢ என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.⁾ 4⁽ஆண்டவரே! நீர்␢ திருவாய் மலர்ந்த சொற்களைப்␢ பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு␢ உம்மைப் போற்றுவர்.⁾ 5⁽ஆண்டவரே! உம் வழிகளை␢ அவர்கள் புகழ்ந்து பாடுவர்;␢ ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!⁾ 7⁽நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,␢ என் உயிரைக் காக்கின்றீர்;␢ என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக␢ உமது கையை நீட்டுகின்றீர்;␢ உமது வலக்கையால்␢ என்னைக் காப்பாற்றுகின்றீர்.⁾ 8⁽நீர் வாக்களித்த அனைத்தையும்␢ எனக்கெனச் செய்து முடிப்பீர்;␢ ஆண்டவரே! என்றும் உள்ளது␢ உமது பேரன்பு;␢ உம் கைவினைப் பொருளைக்␢ கைவிடாதேயும்.⁾
Second Reading

1 கொரிந்தியர் 15: 1-11 or 1 கொரிந்தியர் 15: 3-8, 11

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

மத்தேயு 4: 19

19இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.
Gospel

லூக்கா 5: 1-11

1ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். 2அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். 3அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.⒫ 4அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். 5சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். 6அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, 7மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. 8இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். 9அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். 10சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். 11அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.