பிப்ரவரி 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
272829
இன்றுக்கு

வாசகங்கள்

14 பிப்ரவரி, 2028

Cyril and Methodius, Bishops Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

யாக்கோபு 1: 1-11

1சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது: 2என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். 3உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். 4உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள். 5உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். 6ஆனால், நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். 7❮7-8❯எனவே, இத்தகைய இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும். 8Same as above 9தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வுபெறும்போது மகிழ்ச்சியடைவார்களாக! 10செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில், செல்வர்கள் புல்வெளிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள். 11கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 67, 68, 71, 72, 75, 76

67⁽நீர் என்னைத் தண்டிக்குமுன்பு␢ நான் தவறிழைத்தேன்;␢ ஆனால், இப்போது␢ உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.⁾ 68⁽நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;␢ எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.⁾ 71⁽எனக்குத் துன்பம் விளைந்தது␢ என் நன்மைக்காகவே;␢ அதனால், உம் விதிமுறைகளை␢ நான் கற்றுக்கொண்டேன்.⁾ 72⁽நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,␢ ஆயிரக்கணக்கான பொன்,␢ வெள்ளிக் காசுகளைவிட␢ எனக்கு மேலானது.⁾ 75⁽ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள்␢ நேரியவை என அறிவேன்;␢ நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.⁾ 76⁽எனக்கு ஆறுதலளிக்குமாறு␢ உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;␢ உம் ஊழியனுக்கு␢ வாக்குறுதி அளித்தீர் அன்றோ!⁾
Alleluia

யோவான் 14: 6

6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel

மாற்கு 8: 11-13

11பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். 12அவர் பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். 13அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறுகரைக்குச் சென்றார்.