வாசகங்கள்
20 பிப்ரவரி, 2028
Seventh Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
1 சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 103: 1-2, 3-4, 8, 10, 12-13
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾
2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾
3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾
4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾
8⁽ஆண்டவர் இரக்கமும் அருளும்␢ கொண்டவர்;␢ நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.⁾
10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾
12⁽மேற்கினின்று கிழக்கு␢ எத்துணைத் தொலைவிலுள்ளதோ,␢ அத்துணைத் தொலைவிற்கு␢ நம் குற்றங்களை நம்மிடமிருந்து␢ அவர் அகற்றுகின்றார்.⁾
13⁽தந்தை தம் பிள்ளைகள்மீது␢ இரக்கம் காட்டுவதுபோல்␢ ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது␢ இரங்குகிறார்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 15: 45-49
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
யோவான் 13: 34
34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
Gospel
லூக்கா 6: 27-38
27“நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
28உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
29உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;
30உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.”⒫
31“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
32உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.
33உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.
34திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
35நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில், அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
36உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
37“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
38கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”⒫