பிப்ரவரி 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
272829
இன்றுக்கு

வாசகங்கள்

17 பிப்ரவரி, 2028

Ordinary Weekday/ Seven Founders of the Order of Servites, Religious

Seven Founders of the Order of Servites, Religious
First Reading

யாக்கோபு 2: 1-9

1என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். 2பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். 3அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். 4இவ்வாறு, உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?⒫ 5என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? 6நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? 7கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா? 8⁽“உன்மீது நீ அன்புகூர்வதுபோல்␢ உனக்கு அடுத்திருப்பவர் மீதும்␢ அன்பு கூர்வாயாக!”⁾ என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. 9மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 34: 2-3, 4-5, 6-7

2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾ 3⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾ 4⁽துணைவேண்டி நான் ஆண்டவரை␢ மன்றாடினேன்; அவர் எனக்கு␢ மறுமொழி பகர்ந்தார்;␢ எல்லா வகையான அச்சத்தினின்றும்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾ 5⁽அவரை நோக்கிப் பார்த்தோர்␢ மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;␢ அவர்கள் முகம்␢ அவமானத்திற்கு உள்ளாகவில்லை.⁾ 6⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾ 7⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾
Alleluia

யோவான் 6: 63c, 68c

63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. 68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
Gospel

மாற்கு 8: 27-33

27இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். 28அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். 29“ஆனால், நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். 30தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். 31“மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். 32இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33ஆனால், இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.⒫