பிப்ரவரி 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
272829
இன்றுக்கு

வாசகங்கள்

10 பிப்ரவரி, 2028

Scholastica, Virgin, Religious Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

1 அரசர்கள் 11: 4-13

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 106: 3-4, 35-36, 37 and 40

3⁽நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்!␢ எப்போதும் நேரியதே செய்வோர்␢ பேறுபேற்றோர்!⁾ 4⁽ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது␢ இரக்கம் காட்டும்போது␢ என்னை நினைவு கூரும்!␢ அவர்களை நீர் விடுவிக்கும்போது␢ எனக்கும் துணைசெய்யும்!⁾ 35⁽வேற்றினத்தாரோடு கலந்துறவாடி,␢ அவர்களின் வழக்கங்களைக்␢ கற்றுக்கொண்டனர்;⁾ 36⁽அவர்களின் தெய்வச் சிலைகளைத்␢ தொழுதனர்; அவையே␢ அவர்களுக்குக் கண்ணிகளாயின.⁾ 37⁽அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப்␢ பேய்களுக்குப் பலியிட்டனர்;⁾ 40⁽எனவே, ஆண்டவரின் சினம்␢ அவர்தம் மக்களுக்கெதிராகப்␢ பற்றியெரிந்தது;␢ தமது உரிமைச் சொத்தை␢ அவர் அருவருத்தார்.⁾
Alleluia

யாக்கோபு 1: 21bc

21எனவே, எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.
Gospel

மாற்கு 7: 24-30

24இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. 25உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. 26அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். 27இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். 28அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார். 29அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று” என்றார். 30அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.