பிப்ரவரி 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
272829
இன்றுக்கு

வாசகங்கள்

13 பிப்ரவரி, 2028

Sixth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

எரேமியா 17: 5-8

5⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ மனிதரில் நம்பிக்கை வைப்போரும்␢ வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக்␢ காண்போரும் சபிக்கப்படுவர்.⁾ 6⁽அவர்கள் பாலைநிலத்துப்␢ புதர்ச்செடிக்கு ஒப்பாவர்.␢ பருவ காலத்திலும்␢ அவர்கள் பயனடையார்;␢ பாலை நிலத்தின்␢ வறண்ட பகுதிகளிலும்␢ யாரும் வாழா உவர் நிலத்திலுமே␢ அவர்கள் குடியிருப்பர்.⁾ 7⁽ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்␢ பேறுபெற்றோர்;␢ ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.⁾ 8⁽அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட␢ மரத்துக்கு ஒப்பாவர்;␢ அது நீரோடையை நோக்கி␢ வேர் விடுகின்றது.␢ வெப்பமிகு நேரத்தில்␢ அதற்கு அச்சமில்லை;␢ அதன் இலைகள்␢ பசுமையாய் இருக்கும்;␢ வறட்சிமிகு ஆண்டிலும்␢ அதற்குக் கவலை இராது;␢ அது எப்போதும் கனி கொடுக்கும்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 1: 1-2, 3, 4 and 6

1⁽நற்பேறு பெற்றவர் யார்? – அவர்␢ பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;␢ பாவிகளின் தீயவழி நில்லாதவர்;␢ இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;⁾ 2⁽ஆனால், அவர் ஆண்டவரின்␢ திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;␢ அவரது சட்டத்தைப்பற்றி␢ இரவும் பகலும் சிந்திப்பவர்;⁾ 3⁽அவர் நீரோடையோரம் நடப்பட்ட␢ மரம் போல் இருப்பார்;␢ பருவகாலத்தில் கனிதந்து,␢ என்றும் பசுமையாய் இருக்கும்␢ அம்மரத்திற்கு ஒப்பாவார்;␢ தாம் செய்வதனைத்திலும்␢ வெற்றி பெறுவார்.⁾ 4⁽ஆனால், பொல்லார் அப்படி இல்லை;␢ அவர்கள் காற்று அடித்துச் செல்லும்␢ பதரைப்போல் ஆவர்.⁾ 6⁽நேர்மையாளரின் நெறியை␢ ஆண்டவர் கருத்தில் கொள்வார்;␢ பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.⁾
Second Reading

1 கொரிந்தியர் 15: 12, 16-20

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

லூக்கா 6: 23ab

23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.
Gospel

லூக்கா 6: 17, 20-26

17இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 20இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ⁽“ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், இறையாட்சி␢ உங்களுக்கு உரியதே.⁾ 21⁽இப்பொழுது பட்டினியாய் இருப்போரே,␢ நீங்கள் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.␢ இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே,␢ நீங்கள் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.⁾⒫ 22மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். 23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர். 24⁽ஆனால் செல்வர்களே␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், நீங்கள் எல்லாம்␢ அனுபவித்துவிட்டீர்கள்.⁾ 25⁽இப்போது உண்டு கொழுந்திருப்போரே,␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், பட்டினி கிடப்பீர்கள்.␢ இப்போது சிரித்து இன்புறுவோரே,␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், துயருற்று அழுவீர்கள்.⁾⒫ 26மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.