பிப்ரவரி 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
272829
இன்றுக்கு

வாசகங்கள்

23 பிப்ரவரி, 2028

Polycarp, Bishop, Martyr Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

யாக்கோபு 4: 13-17

13“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே சற்றுக் கேளுங்கள். 14நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். 15ஆகவே, அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை. 16இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. 17நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 49: 2-3, 6-7, 8-10, 11

2⁽தாழ்ந்தோரே, உயர்ந்தோரே,␢ செல்வர்களே, ஏழைகளே,␢ அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.⁾ 3⁽என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்;␢ என் மனம் விவேகமானவற்றை␢ ஆழ்ந்து சிந்திக்கும்.⁾ 6⁽தம் செல்வத்தில்␢ நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ␢ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப்␢ பெருமையாகப் பேசுகின்றனர்.⁾ 7⁽உண்மையில், தம்மைதாமே␢ மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;␢ தம் உயிரை மீட்க எதையும்␢ கடவளுக்குத் தர இயலாது.⁾ 8⁽மனித உயிரின் ஈட்டுத் தொகை␢ மிகப் பெரிது;␢ எவராலும் அதனைச் செலுத்த இயலாது.⁾ 9⁽ஒருவரால் என்றென்றும்␢ வாழ்ந்திடமுடியுமா?␢ படுகுழியைக் காணாமல்␢ இருந்திட முடியுமா?⁾ 10⁽ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும்␢ மாண்டழிவதுபோல,␢ ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை␢ நாம் காண்கின்றோம் அன்றோ!␢ அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப்␢ பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.⁾ 11⁽கல்லறைகளே* அவர்களுக்கு␢ நிலையான வீடுகள்!␢ அவையே எல்லாத் தலைமுறைக்கும்␢ அவர்கள் குடியிருப்பு!␢ அவர்களுக்குத் தங்கள் பெயரில்␢ நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.⁾
Alleluia

யோவான் 14: 6

6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel

மாற்கு 9: 38-40

38அப்பொழுது யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார். 39அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில், என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். 40ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.