வாசகங்கள்
27 பிப்ரவரி, 2028
Eighth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
சீராக் 27: 4-7
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 92: 2-3, 13-14, 15-16
2⁽காலையில் உமது பேரன்பையும்␢ இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்⁾
3⁽பத்துநரம்பு வீணையோடும்␢ தம்புரு, சுரமண்டல இசையோடும்␢ எடுத்துரைப்பது நன்று.⁾
13⁽ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்␢ நம் கடவுளின் கோவில் முற்றங்களில்␢ செழித்தோங்குவர்.⁾
14⁽அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்;␢ என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;⁾
15⁽‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்;␢ அவரே என் பாறை;␢ அவரிடம் அநீதி ஏதுமில்லை’␢ என்று அறிவிப்பர்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 15: 54-58
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
பிலிப்பியர் 2: 15d, 16a
15அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.
16கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.⒫
Gospel
லூக்கா 6: 39-45
39மேலும், இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?
40சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால், தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.⒫
41“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?
42உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
43“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
44ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால், முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
45நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.