அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

12 அக்டோபர், 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

கலாத்தியர் 3: 1-5

1அறிவிலிகளான காலத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? 2உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்; நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? 3தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? 4நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத் தான் முடியுமா? 5உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடயே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
Responsorial Psalm

லூக்கா 1: 69, 70-71, 72, 73-75

69❮69-70❯⁽தம் தூய இறைவாக்கினர் வாயினால்␢ தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே␢ அவர் தம் ஊழியராகிய␢ தாவீதின் குடும்பத்தில்␢ வல்லமை உடைய மீட்பர் ஒருவர்␢ நமக்காகத் தோன்றச் செய்தார்;⁾ 70Same as above 71⁽நம் பகைவரிடமிருந்தும்␢ நம்மை வெறுப்போர் அனைவரின்␢ பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.⁾ 72❮72-73❯⁽அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,␢ தமது தூய உடன்படிக்கையையும்,␢ நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு␢ அவர் இட்ட ஆணையையும்␢ நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.⁾ 73Same as above 74❮74-75❯⁽இவ்வாறு நாம் பகைவரின்␢ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்␢ தூய்மையோடும் நேர்மையோடும்␢ வாழ்நாளெல்லாம் அச்சமின்றி␢ அவர் திருமுன் பணிசெய்யுமாறு␢ வழிவகுத்தார்.⁾ 75Same as above
Alleluia

திருத்தூதர் பணிகள் 16: 14b

14அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
Gospel

லூக்கா 11: 5-13

5மேலும், அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. 6என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். 7உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். 8எனினும், அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”⒫ 9“மேலும், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். 10ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். 11பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? 12முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? 13தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”