அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

3 அக்டோபர், 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

யோபு 3: 1-3, 11-17, 20-23

1இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். 2யோபு கூறியது: 3⁽“ஒழிக நான் பிறந்த அந்த நாளே!␢ ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்␢ சொல்லிய அந்த இரவே!⁾ 11⁽கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?␢ கருவறையினின்று வெளிப்பட்டவுடனே␢ நான் ஒழிந்திருக்கலாகாதா?⁾ 12⁽என்னை ஏந்த முழங்கால்கள்␢ முன் வந்ததேன்?␢ நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?⁾ 13⁽இல்லாதிருந்திருந்தால்,␢ நான் வெறுமனே கிடந்து␢ துயில் கொண்டிருப்பேன்.⁾ 14⁽பாழானவைகளைத்␢ தமக்குக் கட்டிக்கொண்ட␢ மாநிலத்து மன்னர்களோடும்␢ அமைச்சர்களோடும்⁾ 15⁽அல்லது பொன்னை␢ மிகுதியிருக்கக் கொண்டு,␢ வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின␢ உயர்குடி மக்களோடும்␢ நான் உறங்கியிருந்திருப்பேன்.⁾ 16⁽அல்லது முழுமை பெறாக்␢ கருவைப் போலவும்␢ ஒளியைக் காணாக்␢ குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.⁾ 17⁽அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.␢ களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.⁾ 20⁽உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?␢ உள்ளம் கசந்தோர்க்கு␢ உயிர் கொடுப்பானேன்?⁾ 21⁽சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;␢ அதைப் புதையலினும் மேலாய்க்␢ கருதித் தேடுகிறார்கள்.␢ ஆனால் அதுவோ வந்த பாடில்லை.⁾ 22⁽கல்லறை காணின் களிப்பெய்தி␢ அகமகிழ்வோர்க்கு,␢ வாழ்வு வழங்கப்படுவதேன்?⁾ 23⁽எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,␢ எவரைச் சுற்றிலும் கடவுள்␢ தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,␢ அவருக்கு ஒளியால் என்ன பயன்?⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 88: 2-3, 4-5, 6, 7-8

2⁽என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!␢ என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!⁾ 3⁽ஏனெனில், என் உள்ளம்␢ துன்பத்தால் நிறைந்துள்ளது;␢ என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.⁾ 4⁽படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக␢ நானும் கணிக்கப்படுகின்றேன்;␢ வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.⁾ 5⁽இறந்தோருள் ஒருவராகக்␢ கைவிடப்பட்டேன்;␢ கொலையுண்டு கல்லறையில்␢ கிடப்பவர்போல் ஆனேன்;␢ அவர்களை ஒருபோதும்␢ நீர் நினைப்பதில்லை;␢ அவர்கள் உமது பாதுகாப்பினின்று␢ அகற்றப்பட்டார்கள்.⁾ 6⁽ஆழமிகு படுகுழிக்குள்␢ என்னைத் தள்ளிவிட்டீர்!␢ காரிருள் பள்ளங்களுக்குள்␢ என்னைக் கைவிட்டு விட்டீர்.⁾ 7⁽உமது சினம் என்னை அழுத்துகின்றது;␢ உம் அலைகள் அனைத்தும்␢ என்னை வருத்துகின்றன. (சேலா)⁾ 8⁽எனக்கு அறிமுகமானவர்களை␢ என்னைவிட்டு விலகச்செய்தீர்;␢ அவர்களுக்கு என்னை␢ அருவருப்பாக்கினீர்;␢ நான் வெளியேற இயலாவண்ணம்␢ அடைபட்டுள்ளேன்.⁾
Alleluia

மாற்கு 10: 45

45ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய* மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
Gospel

லூக்கா 9: 51-56

51இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 52தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 53அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். 55அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். 56பின்பு, அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.