வாசகங்கள்
8 அக்டோபர், 2028
Twenty-Seventh Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
அபக்கூக்கு 1: 2-3; 2: 2-4
2⁽ஆண்டவரே,␢ எத்துணைக் காலத்திற்கு நான்␢ துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்;␢ நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?␢ இன்னும் எத்துணைக் காலத்திற்கு␢ வன்முறையை முன்னிட்டு␢ உம்மிடம் அழுது புலம்புவேன்;␢ நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?⁾
3⁽நீர் என்னை ஏன்␢ கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர்,␢ கேட்டினைக் காணச் செய்கின்றீர்?␢ கொள்ளையும் வன்முறையும்␢ என் கண்முன் நிற்கின்றன;␢ வழக்கும் வாதும் எழும்புகின்றன.⁾
2⁽ஆண்டவர் எனக்கு அளித்த␢ மறுமொழி இதுவே:␢ “காட்சியை எழுதிவை;␢ விரைவாய் ஓடுகிறவனும்␢ படிக்கும் வண்ணம்␢ பலகைகளில் தெளிவாய் எழுது.⁾
3⁽குறித்த காலத்தில்␢ நிறைவேறுவதற்காகக்␢ காட்சி இன்னும் காத்திருக்கின்றது;␢ முடிவை நோக்கி␢ விரைந்து செல்கின்றது.␢ ஒருக்காலும் பொய்க்காது.␢ அது காலந்தாழ்த்தி␢ வருவதாகத் தோன்றினால்,␢ எதிர்பார்த்துக் காத்திரு;␢ அது நிறைவேறியே தீரும்;␢ காலம் தாழ்த்தாது.⁾
4⁽இதை நம்பாதவரோ உள்ளத்திலே␢ நேர்மையற்றவராய் இருப்பர்;␢ நேர்மையுடையவரோ␢ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 95: 1-2, 6-7, 8-9
1⁽வாருங்கள்; ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ நமது மீட்பின் பாறையைப்␢ போற்றி ஆர்ப்பரியுங்கள்.⁾
2⁽நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;␢ புகழ்ப் பாக்களால் அவரைப்␢ போற்றி ஆர்ப்பரிப்போம்.⁾
6⁽வாருங்கள்; தாள்பணிந்து␢ அவரைத் தொழுவோம்;␢ நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்␢ முழந்தாளிடுவோம்.⁾
7⁽அவரே நம் கடவுள்;␢ நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;␢ நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.␢ இன்று நீங்கள் அவரது குரலுக்குச்␢ செவிகொடுத்தால் எத்துணை நலம்!⁾
8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
9⁽அங்கே உங்கள் மூதாதையர்␢ என்னைச் சோதித்தனர்;␢ என் செயல்களைக் கண்டிருந்தும்␢ என்னைச் சோதித்துப் பார்த்தனர்.⁾
Second Reading
2 திமொத்தேயு 1: 6-8, 13-14
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
1 பேதுரு 1: 25
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 17: 5-10
5திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.
6அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.⒫
7“உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா?
8மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா?
9தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?
10அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”