அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

2 அக்டோபர், 2028

The Guardian Angels Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

யோபு 1: 6-22

6ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். 7ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான். 8ஆண்டவர் சாத்தானிடம், “என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார். 9மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? 10அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து “நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? 11ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான். 12ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான். 13ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். 14அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுதுகொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. 15அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 16இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 17இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 18இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர். 19அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 20யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, 21⁽“என் தாயின் கருப்பையினின்று␢ பிறந்த மேனியனாய் யான் வந்தேன்;␢ அங்கே திரும்புகையில் பிறந்த␢ மேனியனாய் யான் செல்வேன்;␢ ஆண்டவர் அளித்தார்;␢ ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.␢ ஆண்டவரது பெயர்␢ போற்றப்பெறுக!” என்றார்.⁾ 22இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 17: 1bcd, 2-3, 6-7

1⁽ஆண்டவரே, என் வழக்கின்␢ நியாயத்தைக் கேட்டருளும்;␢ என் வேண்டுதலை உற்றுக் கேளும்;␢ வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்␢ என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.⁾ 2⁽உம் முன்னிலையினின்று␢ எனக்கு நீதி கிடைக்கட்டும்;␢ உம் கண்கள் நேரியன காணட்டும்.⁾ 3⁽என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;␢ இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;␢ என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;␢ தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;␢ என் வாய் பிழை செய்யக்கூடாதென␢ உறுதி கொண்டேன்.⁾ 6⁽இறைவா, நான் உம்மை நோக்கிக்␢ கூப்பிடுகின்றேன்; ஏனெனில், § நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.␢ என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;␢ என் விண்ணப்பத்திற்குச் § செவிசாய்த்தருளும்.⁾ 7⁽உமது வியத்தகு பேரன்பைக்␢ காண்பித்தருளும்;␢ உம்மிடம் அடைக்கலம் புகுவோரை␢ அவர்களுடைய எதிரிகளிடமிருந்து␢ உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!⁾
Alleluia

திருப்பாடல்கள் 103: 21

21⁽ஆண்டவரின் படைகளே!␢ அவர் திருவுளப்படி நடக்கும்␢ அவர்தம் பணியாளரே!␢ அவரைப் போற்றுங்கள்.⁾
Gospel

மத்தேயு 18: 1-5, 10

1அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். 2அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, 3பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 4இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். 5இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். 10“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.