அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

27 அக்டோபர், 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

எபேசியர் 4: 1-6

1ஆதலால், ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். 2முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, 3அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். 4நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. 5அவ்வாறே, ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. 6எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 24: 1-2, 3-4ab, 5-6

1⁽மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள␢ அனைத்தும் ஆண்டவருடையவை;␢ நிலவுலகும் அதில் வாழ்வனவும்␢ அவருக்கே சொந்தம்.⁾ 2⁽ஏனெனில், அவரே கடல்கள்மீது␢ அதற்கு அடித்தளமிட்டார்;␢ ஆறுகள்மீது அதை␢ நிலைநாட்டினவரும் அவரே.⁾ 3⁽ஆண்டவரது மலையில் ஏறத்␢ தகுதியுள்ளவர் யார்?␢ அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?⁾ 4⁽கறைபடாத கைகளும்␢ மாசற்ற மனமும் உடையவர்;␢ பொய்த் தெய்வங்களை நோக்கித்␢ தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;␢ வஞ்சக நெஞ்சோடு␢ ஆணையிட்டுக் கூறாதவர்,⁾ 5⁽இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;␢ தம் மீட்பராம் கடவுளிடமிருந்து␢ நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.⁾ 6⁽அவரை நாடுவோரின்␢ தலைமுறையினர் இவர்களே:␢ *யாக்கோபின் கடவுளது முகத்தைத்*␢ தேடுவோர் இவர்களே. (சேலா)⁾
Alleluia

மத்தேயு 11: 25

25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel

லூக்கா 12: 54-59

54இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. 55தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. 56வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? 57“நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? 58நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். 59கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”