அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

31 அக்டோபர், 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

எபேசியர் 5: 21-33

21கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். 22திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். 23ஏனெனில், கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். 24திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.⒫ 25திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில், கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். 26வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். 27அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். 28அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார். 29தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். 30ஏனெனில், நாம் அவரது உடலின் உறுப்புகள். 31⁽“இதனால் கணவர்␢ தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத்␢ தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்;␢ இருவரும் ஒரே உடலாயிருப்பர்”⁾ என மறைநூல் கூறுகிறது. 32இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன். 33எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 128: 1-2, 3, 4-5

1⁽ஆண்டவருக்கு அஞ்சி␢ அவர் வழிகளில் நடப்போர்␢ பேறுபெற்றோர்!⁾ 2⁽உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!␢ நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!⁾ 3⁽உம் இல்லத்தில் உம் துணைவியார்␢ கனிதரும் திராட்சைக் கொடிபோல்␢ இருப்பார்;␢ உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள்␢ ஒலிவக் கன்றுகளைப் போல்␢ உம்மைச் சூழ்ந்திருப்பர்.⁾ 4⁽ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர்␢ இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.⁾ 5⁽ஆண்டவர் சீயோனிலிருந்து␢ உமக்கு ஆசி வழங்குவாராக!␢ உம் வாழ் நாளெல்லாம் நீர்␢ எருசலேமின் நல்வாழ்வைக்␢ காணும்படி செய்வாராக!⁾
Alleluia

மத்தேயு 11: 25

25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel

லூக்கா 13: 18-21

18பின்பு இயேசு, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 19அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.⒫ 20மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? 21அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.