அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

14 அக்டோபர், 2028

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ Callistus I, Pope, Martyr

Callistus I, Pope, Martyr
First Reading

கலாத்தியர் 3: 22-29

22ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.⒫ 23நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. 24இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. 25இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை.⒫ 26ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். 27அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். 28இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். 29நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 105: 2-3, 4-5, 6-7

2⁽அவருக்குப் பாடல் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!␢ அவர்தம் வியத்தகு செயல்கள்␢ அனைத்தையும் எடுத்துரையுங்கள்!⁾ 3⁽அவர்தம் திருப்பெயரை␢ மாட்சிப்படுத்துங்கள்;␢ ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்␢ அக்களிப்பதாக!⁾ 4⁽ஆண்டவரையும்␢ அவரது ஆற்றலையும் தேடுங்கள்!␢ அவரது திருமுகத்தை␢ இடையறாது நாடுங்கள்!⁾ 5⁽அவர் செய்த வியத்தகு செயல்களை␢ நினைவு கூருங்கள்!␢ அவர்தம் அருஞ்செயல்களையும்,␢ அவரது வாய் மொழிந்த␢ நீதித் தீர்ப்புகளையும்␢ நினைவில் கொள்ளுங்கள்.⁾ 6⁽அவரின் ஊழியராம்␢ ஆபிரகாமின் வழிமரபே!␢ அவர் தேர்ந்துகொண்ட␢ யாக்கோபின் பிள்ளைகளே!⁾ 7⁽அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!␢ அவரின் நீதித்தீர்ப்புகள்␢ உலகம் அனைத்திற்கும் உரியன.⁾
Alleluia

லூக்கா 11: 28

28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
Gospel

லூக்கா 11: 27-28

27அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார். 28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.