அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

17 அக்டோபர், 2028

Ignatius of Antioch, Bishop, Martyr Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

கலாத்தியர் 5: 1-6

1கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.⒫ 2பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை. 3விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன். 4திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய்விட்டீர்கள்; அருளை இழந்து விட்டீர்கள். 5ஆனால், நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம். 6கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 41, 43, 44, 45, 47, 48

41⁽ஆண்டவரே! உமது பேரன்பு␢ எனக்குக் கிடைக்கச் செய்யும்;␢ உமது வாக்குறுதியின்படி␢ நீர் என்னை மீட்பீராக!⁾ 43⁽என் வாயினின்று உண்மையின் சொற்கள்␢ நீங்கவிடாதேயும்;␢ ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது␢ நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.⁾ 44⁽உமது திருச்சட்டத்தை␢ நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்;␢ என்றென்றும் எக்காலமும்␢ அதைப் பின்பற்றுவேன்.⁾ 45⁽உம் நியமங்களை நான் நாடியுள்ளதால்␢ பரந்த பாதையில்␢ தடையின்றி நான் நடப்பேன்.⁾ 47⁽உம் கட்டளைகளில் நான்␢ மகிழ்ச்சியுறுகின்றேன்;␢ அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.⁾ 48⁽நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி␢ என் கைகளை உயர்த்துகின்றேன்;␢ உம் விதிமுறைகளைப் பற்றி␢ நான் சிந்திப்பேன்.⁾
Alleluia

எபிரேயர் 4: 12

12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
Gospel

லூக்கா 11: 37-41

37இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 38உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். 39ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. 40அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! 41உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.⒫