அக்டோபர் 2028

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

22 அக்டோபர், 2028

Twenty-Ninth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

விடுதலைப் பயணம் 17: 8-13

8பின்னர், அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். 9மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார். 10அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே மோசே. ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். 11மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். 12மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. 13யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 121: 1-2, 3-4, 5-6, 7-8

1⁽மலைகளை நோக்கி␢ என் கண்களை␢ உயர்த்துகின்றேன்!␢ எங்கிருந்து எனக்கு உதவி வரும்?⁾ 2⁽விண்ணையும் மண்ணையும் § உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே␢ எனக்கு உதவி வரும்.⁾ 3⁽அவர் உம் கால் இடறாதபடி␢ பார்த்துக் கொள்வார்;␢ உம்மைக் காக்கும் அவர்␢ உறங்கிவிடமாட்டார்.⁾ 4⁽இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்␢ கண்ணயர்வதுமில்லை;␢ உறங்குவதும் இல்லை.⁾ 5⁽ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;␢ அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;␢ அவரே உமக்கு நிழல் ஆவார்!⁾ 6⁽பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;␢ இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.⁾ 7⁽ஆண்டவர் உம்மை␢ எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;␢ அவர் உம் உயிரைக் காத்திடுவார்.⁾ 8⁽நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்␢ இப்போதும் எப்போதும்␢ ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.⁾
Second Reading

2 திமொத்தேயு 3: 14 - 4: 2

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

எபிரேயர் 4: 12

12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
Gospel

லூக்கா 18: 1-8

1அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். 2“ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 3அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். 4நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 5என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.” 6பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், 7தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? 8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.