வாசகங்கள்
16 அக்டோபர், 2028
Ordinary Weekday/ Hedwig, Religious/ Margaret Mary Alacoque, Virgin
Margaret Mary Alacoque, Virgin
First Reading
கலாத்தியர் 4: 22-24, 26-27, 31 - 5: 1
22ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்; மற்றவன் உரிமைப்பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.
23அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்; உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன்.
24இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது.
26மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்; நமக்கு அன்னை.
27ஏனெனில், ⁽“பிள்ளைபெறாத மலடியே,␢ மகிழ்ந்து பாடு!␢ பேறுகால வேதனை அறியாதவளே,␢ அக்களித்துப் பாடி முழங்கு!␢ ஏனெனில், கைவிடப்பட்டவளின்␢ பிள்ளைகள்␢ கணவனோடு வாழ்பவளின்␢ பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்”␢ என்று மறைநூலில் எழுதியுள்ளது.⁾
31ஆகவே, சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள்.
1கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 113: 1b-2, 3-4, 5a and 6-7
1⁽அல்லேலூயா!␢ ஆண்டவரின் ஊழியர்களே,␢ அவரைப் புகழுங்கள்.␢ அவரது பெயரைப் போற்றுங்கள்.⁾
2⁽ஆண்டவரது பெயர்␢ வாழ்த்தப்பெறுவதாக!␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்தப்பெறுவதாக!⁾
3⁽கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை␢ ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!⁾
4⁽மக்களினங்கள் அனைத்திற்கும்␢ ஆண்டவர் மேலானவர்;␢ வானங்களையும்விட உயர்ந்து␢ அவரது மாட்சி.⁾
5⁽நம் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ நிகர் யார்?␢ அவர்போல வானளாவிய உயரத்தில்␢ வீற்றிருப்பவர் யார்?⁾
6⁽அவர் வானத்தையும் வையகத்தையும்␢ குனிந்து பார்க்கின்றார்;⁾
7⁽ஏழைகளைத் தூசியிலிருந்து␢ அவர் தூக்கி நிறுத்துகின்றார்;␢ வறியரைக் குப்பை மேட்டிலிருந்து␢ கைதூக்கி விடுகின்றார்;⁾
Alleluia
திருப்பாடல்கள் 95: 8
8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
Gospel
லூக்கா 11: 29-32
29மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
30யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.
31தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில், அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால், இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!
32தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!