வாசகங்கள்
31 டிசம்பர், 2026
The Seventh Day in the Octave of Christmas
அன்றைய திருப்பலி
Reading I
1 யோவான் 2:18-21
18குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே, இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம்.
19இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.⒫
20நீங்கள் தூயவரால் அருள் பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால், நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள்.*
21நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 96:1-2, 11-12, 13
1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾
2⁽ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;␢ அவர் பெயரை வாழ்த்துங்கள்;␢ அவர் தரும் மீட்பை␢ நாள்தோறும் அறிவியுங்கள்.⁾
11⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾
12⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾
13⁽ஏனெனில் அவர் வருகின்றார்;␢ மண்ணுலகிற்கு␢ நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;␢ நிலவுலகை நீதியுடனும்␢ மக்களினங்களை உண்மையுடனும்␢ அவர் தீர்ப்பிடுவார்.⁾
Alleluia
யோவான் 1:14, 12
14⁽வாக்கு மனிதர் ஆனார்;␢ நம்மிடையே குடிகொண்டார்.␢ அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.␢ அருளும் உண்மையும்␢ நிறைந்து விளங்கிய அவர்␢ தந்தையின் ஒரே மகன்␢ என்னும் நிலையில்␢ இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.⁾
12⁽அவரிடம் நம்பிக்கை கொண்டு␢ அவரை ஏற்றுக்கொண்ட␢ ஒவ்வொருவருக்கும் அவர்␢ கடவுளின் பிள்ளைகள் ஆகும்␢ உரிமையை அளித்தார்.⁾
Gospel
யோவான் 1:1-18
1⁽தொடக்கத்தில் வாக்கு இருந்தது;␢ அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;␢ அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.*⁾
2⁽வாக்கு என்னும் அவரே␢ தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.⁾
3⁽அனைத்தும் அவரால் உண்டாயின;␢ உண்டானது எதுவும்␢ அவரால் அன்றி உண்டாகவில்லை.⁾
4⁽அவரிடம் வாழ்வு இருந்தது;␢ அவ்வாழ்வு மனிதருக்கு␢ ஒளியாய் இருந்தது.⁾
5⁽அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;␢ இருள் அதன்மேல்␢ வெற்றி கொள்ளவில்லை.*⁾
6⁽கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்;␢ அவர் பெயர் யோவான்.⁾
7⁽அவர் சான்று பகருமாறு வந்தார்.␢ அனைவரும் தம் வழியாக நம்புமாறு␢ அவர் ஒளியைக் குறித்துச்␢ சான்று பகர்ந்தார்.⁾
8⁽அவர் அந்த ஒளி அல்ல;␢ மாறாக, ஒளியைக் குறித்துச்␢ சான்று பகர வந்தவர்.⁾
9⁽அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும்␢ உண்மையான ஒளி␢ உலகிற்கு வந்துகொண்டிருந்தது.⁾
10⁽ஒளியான அவர் உலகில் இருந்தார்.␢ உலகு அவரால்தான் உண்டானது.␢ ஆனால் உலகு அவரை␢ அறிந்து கொள்ளவில்லை.⁾
11⁽அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்.*␢ அவருக்கு உரியவர்கள்␢ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.⁾
12⁽அவரிடம் நம்பிக்கை கொண்டு␢ அவரை ஏற்றுக்கொண்ட␢ ஒவ்வொருவருக்கும் அவர்␢ கடவுளின் பிள்ளைகள் ஆகும்␢ உரிமையை அளித்தார்.⁾
13⁽அவர்கள் இரத்தத்தினாலோ␢ உடல் இச்சையினாலோ␢ ஆண்மகன் விருப்பத்தினாலோ␢ பிறந்தவர்கள் அல்லர்;␢ மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.⁾
14⁽வாக்கு மனிதர் ஆனார்;␢ நம்மிடையே குடிகொண்டார்.␢ அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.␢ அருளும் உண்மையும்␢ நிறைந்து விளங்கிய அவர்␢ தந்தையின் ஒரே மகன்␢ என்னும் நிலையில்␢ இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.⁾
15⁽யோவான் அவரைக் குறித்து,␢ “எனக்குப்பின் வரும் இவர்␢ என்னைவிட முன்னிடம் பெற்றவர்;␢ ஏனெனில், எனக்கு முன்பே␢ இருந்தார் என்று␢ நான் இவரைப்பற்றியே சொன்னேன்”␢ என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.⁾
16⁽இவரது நிறைவிலிருந்து␢ நாம் யாவரும் நிறைவாக␢ அருள் பெற்றுள்ளோம்.⁾
17⁽திருச்சட்டம் மோசே வழியாகக்␢ கொடுக்கப்பட்டது;␢ அருளும் உண்மையும்␢ இயேசு கிறிஸ்து வழியாய்␢ வெளிப்பட்டன.⁾
18⁽கடவுளை யாரும் என்றுமே␢ கண்டதில்லை;␢ தந்தையின் நெஞ்சத்திற்கு␢ நெருக்கமானவரும்␢ கடவுள்தன்மை கொண்டவருமான␢ ஒரே மகனே␢ அவரை வெளிப்படுத்தியுள்ளார்.⁾