டிசம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

25 டிசம்பர், 2026

The Nativity of the Lord (Christmas)Mass during the Day (Mass During the Day)

Mass During the Day
Reading I

எசாயா 52:7-10

7⁽நற்செய்தியை அறிவிக்கவும்,␢ நல்வாழ்வைப் பலப்படுத்தவும்␢ நலம்தரும் செய்தியை உரைக்கவும்,␢ விடுதலையைப் பறைசாற்றவும்,␢ சீயோனை நோக்கி, ‘உன் கடவுள்␢ அரசாளுகின்றார்’ என்று கூறவும்␢ வருவோனின் பாதங்கள் மலைகள்மேல்␢ எத்துணை அழகாய் இருக்கின்றன!⁾ 8⁽இதோ, உன் சாமக் காவலர்␢ குரல் எழுப்புகின்றனர்;␢ அவர்கள் அக்களித்து ஒருங்கே␢ ஆரவாரம் செய்கின்றனர்;␢ ஆண்டவர் சீயோனுக்குத்␢ திரும்பி வருவதை அவர்கள்␢ தம் கண்களாலேயே காண்பர்.⁾ 9⁽எருசலேமின் பாழ் இடங்களே,␢ ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;␢ ஆண்டவர் தம் மக்களுக்கு␢ ஆறுதல் அளித்துள்ளார்;␢ எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.⁾ 10⁽பிறஇனத்தார் அனைவரின்␢ கண்களும் காண␢ ஆண்டவர் தம் தூய புயத்தினைத்␢ திறந்து காட்டியுள்ளார்;␢ மண்ணுலகின் எல்லைகள் யாவும்␢ நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 98:1, 2-3, 3-4, 5-6.

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் வியத்தகு␢ செயல்கள் புரிந்துள்ளார்.␢ அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்␢ அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.⁾ 2⁽ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;␢ பிற இனத்தார் கண்முன்னே␢ தம் நீதியை வெளிப்படுத்தினார்.⁾ 3⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾ 4⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ அனைவரும் ஆண்டவரை␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!␢ மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்␢ புகழ்ந்தேத்துங்கள்.⁾ 5⁽யாழினை மீட்டி␢ ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ யாழினை மீட்டி இனிய குரலில்␢ அவரை வாழ்த்திப் பாடுங்கள்.⁾ 6⁽ஆண்டவராகிய அரசரின் முன்னே␢ எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.⁾
Reading II

எபிரேயர் 1:1-6

1பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், 2இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். 3கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். 4இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். 5ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ⦃“நீ என் மைந்தர்; இன்று நான் § உம்மைப் பெற்றெடுத்தேன்”⦄ என்றும், ⦃“நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், § அவர் எனக்கு மகனாயிருப்பார்”⦄ என்றும் எப்போதாவது கூறியதுண்டா? 6மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, ⦃“கடவுளின் தூதர் அனைவரும் § அவரை வழிபடுவார்களாக”⦄ என்றார்.
Gospel

யோவான் 1:1-18

1⁽தொடக்கத்தில் வாக்கு இருந்தது;␢ அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;␢ அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.*⁾ 2⁽வாக்கு என்னும் அவரே␢ தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.⁾ 3⁽அனைத்தும் அவரால் உண்டாயின;␢ உண்டானது எதுவும்␢ அவரால் அன்றி உண்டாகவில்லை.⁾ 4⁽அவரிடம் வாழ்வு இருந்தது;␢ அவ்வாழ்வு மனிதருக்கு␢ ஒளியாய் இருந்தது.⁾ 5⁽அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;␢ இருள் அதன்மேல்␢ வெற்றி கொள்ளவில்லை.*⁾ 6⁽கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்;␢ அவர் பெயர் யோவான்.⁾ 7⁽அவர் சான்று பகருமாறு வந்தார்.␢ அனைவரும் தம் வழியாக நம்புமாறு␢ அவர் ஒளியைக் குறித்துச்␢ சான்று பகர்ந்தார்.⁾ 8⁽அவர் அந்த ஒளி அல்ல;␢ மாறாக, ஒளியைக் குறித்துச்␢ சான்று பகர வந்தவர்.⁾ 9⁽அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும்␢ உண்மையான ஒளி␢ உலகிற்கு வந்துகொண்டிருந்தது.⁾ 10⁽ஒளியான அவர் உலகில் இருந்தார்.␢ உலகு அவரால்தான் உண்டானது.␢ ஆனால் உலகு அவரை␢ அறிந்து கொள்ளவில்லை.⁾ 11⁽அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்.*␢ அவருக்கு உரியவர்கள்␢ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.⁾ 12⁽அவரிடம் நம்பிக்கை கொண்டு␢ அவரை ஏற்றுக்கொண்ட␢ ஒவ்வொருவருக்கும் அவர்␢ கடவுளின் பிள்ளைகள் ஆகும்␢ உரிமையை அளித்தார்.⁾ 13⁽அவர்கள் இரத்தத்தினாலோ␢ உடல் இச்சையினாலோ␢ ஆண்மகன் விருப்பத்தினாலோ␢ பிறந்தவர்கள் அல்லர்;␢ மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.⁾ 14⁽வாக்கு மனிதர் ஆனார்;␢ நம்மிடையே குடிகொண்டார்.␢ அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.␢ அருளும் உண்மையும்␢ நிறைந்து விளங்கிய அவர்␢ தந்தையின் ஒரே மகன்␢ என்னும் நிலையில்␢ இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.⁾ 15⁽யோவான் அவரைக் குறித்து,␢ “எனக்குப்பின் வரும் இவர்␢ என்னைவிட முன்னிடம் பெற்றவர்;␢ ஏனெனில், எனக்கு முன்பே␢ இருந்தார் என்று␢ நான் இவரைப்பற்றியே சொன்னேன்”␢ என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.⁾ 16⁽இவரது நிறைவிலிருந்து␢ நாம் யாவரும் நிறைவாக␢ அருள் பெற்றுள்ளோம்.⁾ 17⁽திருச்சட்டம் மோசே வழியாகக்␢ கொடுக்கப்பட்டது;␢ அருளும் உண்மையும்␢ இயேசு கிறிஸ்து வழியாய்␢ வெளிப்பட்டன.⁾ 18⁽கடவுளை யாரும் என்றுமே␢ கண்டதில்லை;␢ தந்தையின் நெஞ்சத்திற்கு␢ நெருக்கமானவரும்␢ கடவுள்தன்மை கொண்டவருமான␢ ஒரே மகனே␢ அவரை வெளிப்படுத்தியுள்ளார்.⁾
Mass at Dawn
Reading I

எசாயா 62:11-12

11⁽உலகின் கடைக்கோடி வரை␢ ஆண்டவர் பறைசாற்றியது:␢ “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்:␢ இதோ, உன் மீட்பு வருகின்றது,␢ அவரது வெற்றிப்பரிசு␢ அவருடன் உள்ளது;␢ அவரது செயலின் பயன்␢ அவர் முன்னே உள்ளது.”⁾ 12⁽‘புனித மக்களினம்’ என்றும்␢ ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும்␢ அவர்கள் அழைக்கப்படுவார்கள்;␢ நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’␢ என்றும்␢ இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும்␢ பெயர் பெறுவாய்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 97:1, 6, 11-12.

1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾ 6⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾ 11⁽நேர்மையாளருக்கென ஒளியும்␢ நேரிய உள்ளத்தோர்க்கென␢ மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.⁾ 12⁽நேர்மையாளர்களே!␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ அவரது தூய்மையை நினைந்து␢ அவரைப் புகழுங்கள்.⁾
Reading II

தீத்து 3:4-7

4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புது பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். 6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். 7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.
Alleluia

லூக்கா 2:14

14Same as above
Gospel

லூக்கா 2:15-20

15வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, 16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். 19ஆனால், மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். 20இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.⒫
Mass at Midnight
Reading I

எசாயா 9:1-6

1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். 2⁽காரிருளில் நடந்துவந்த மக்கள்␢ பேரொளியைக் கண்டார்கள்;␢ சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்␢ குடியிருப்போர்மேல்␢ சுடர் ஒளி உதித்துள்ளது.⁾ 3⁽ஆண்டவரே! அந்த இனத்தாரைப்␢ பல்கிப் பெருகச் செய்தீர்;␢ அவர்கள் மகிழ்ச்சியை␢ மிகுதிப்படுத்தினீர்;␢ அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்␢ உம் திருமுன் அவர்கள்␢ அகமகிழ்கிறார்கள்;␢ கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது␢ அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.⁾ 4⁽மிதியான் நாட்டுக்குச் செய்தது போல␢ அவர்களுக்குச் சுமையாக இருந்த␢ நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;␢ அவர்கள் தோளைப் புண்ணாக்கிய␢ தடியைத் தகர்த்துப் போட்டீர்;␢ அவர்களை ஒடுக்குவோரின்␢ கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.⁾ 5⁽அமளியுற்ற போர்க்களத்தில்␢ போர்வீரன் அணிந்திருந்த␢ காலணிகளும், இரத்தக் கறைபடிந்த␢ ஆடைகள் அனைத்தும்␢ நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.⁾ 6⁽ஏனெனில், ஒரு குழந்தை␢ நமக்குப் பிறந்துள்ளார்;␢ ஓர் ஆண்மகவு நமக்குத்␢ தரப்பட்டுள்ளார்;␢ ஆட்சிப்பொறுப்பு␢ அவர் தோள்மேல் இருக்கும்;␢ அவர் திருப்பெயரோ␢ ‘வியத்தகு ஆலோசகர்,␢ வலிமைமிகு இறைவன்,␢ என்றுமுள தந்தை,␢ அமைதியின் அரசர்’␢ என்று அழைக்கப்படும்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 96:1-2, 2-3, 11-12, 13.

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾ 2⁽ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;␢ அவர் பெயரை வாழ்த்துங்கள்;␢ அவர் தரும் மீட்பை␢ நாள்தோறும் அறிவியுங்கள்.⁾ 3⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾ 11⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾ 12⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾ 13⁽ஏனெனில் அவர் வருகின்றார்;␢ மண்ணுலகிற்கு␢ நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;␢ நிலவுலகை நீதியுடனும்␢ மக்களினங்களை உண்மையுடனும்␢ அவர் தீர்ப்பிடுவார்.⁾
Reading II

தீத்து 2:11-14

11ஏனெனில், மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. 12நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். 13மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. 14அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.⒫
Alleluia

லூக்கா 2:10-11

10வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
Gospel

லூக்கா 2:1-14

1அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். 2அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. 3தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். 4தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, 5கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். 6அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. 7அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். 8அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். 9திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. 10வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். 12குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார். 13❮13-14❯உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ⁽“உன்னதத்தில் கடவுளுக்கு␢ மாட்சி உரித்தாகுக!␢ உலகில் அவருக்கு உகந்தோருக்கு␢ அமைதி உண்டாகுக!”⁾ என்று கடவுளைப் புகழ்ந்தது. 14Same as above
Vigil Mass
Reading I

எசாயா 62:1-5

1⁽சீயோனின் வெற்றி␢ வைகறை ஒளியெனவும்,␢ அதன் மீட்பு சுடர் விளக்கெனவும்␢ வெளிப்படும்வரை,␢ அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்;␢ எருசலேம் பொருட்டுச்␢ செயலற்று அமைதியாயிரேன்.⁾ 2⁽பிறஇனத்தார்␢ உன் வெற்றியைக் காண்பர்;␢ மன்னர் யாவரும்␢ உன் மேன்மையைப் பார்ப்பர்;␢ ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்␢ புதியதொரு பெயரால்␢ நீ அழைக்கப்படுவாய்.⁾ 3⁽ஆண்டவரின் கையில் நீ␢ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்;␢ உன் கடவுளின் கரத்தில்␢ அரச மகுடமாய் விளங்குவாய்.⁾ 4⁽‘கைவிடப்பட்டவள்’ என்று␢ இனி நீ பெயர்பெற மாட்டாய்;␢ ‘பாழ்பட்டது’ என␢ இனி உன் நாடு அழைக்கப்படாது;␢ நீ ‘எப்சிபா’* என்று அழைக்கப்படுவாய்;␢ உன் நாடு ‘பெயுலா’**என்று பெயர் பெறும்.␢ ஏனெனில், ஆண்டவர் உன்னை␢ விரும்புகின்றார்;␢ உன் நாடு மணவாழ்வு பெறும்.⁾ 5⁽இளைஞன் கன்னிப் பெண்ணை␢ மணப்பதுபோல␢ உன்னை எழுப்பியவர்␢ உன்னை மணந்து கொள்வார்;␢ மணமகன் மணப்பெண்ணில்␢ மகிழ்வதுபோல்␢ உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 89:4-5, 16-17, 27, 29.

4⁽உன் வழிமரபை␢ என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;␢ உன் அரியணையைத்␢ தலைமுறை தலைமுறையாக␢ நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா)⁾ 5⁽ஆண்டவரே, வானங்கள்␢ உம் வியத்தகு செயல்களைப் § புகழ்கின்றன;␢ தூயவர் குழுவினில்␢ உமது உண்மை விளங்கும்.⁾ 16⁽அவர்கள் நாள்முழுவதும்␢ உம் பெயரில் களிகூர்வார்கள்;␢ உமது நீதியால்␢ அவர்கள் மேன்மை அடைவார்கள்.⁾ 17⁽ஏனெனில், நீரே அவர்களது␢ ஆற்றலின் மேன்மை;␢ உமது தயவால் எங்கள் வலிமை␢ உயர்த்தப்பட்டுள்ளது.⁾ 27⁽நான் அவனை␢ என் தலைப்பேறு ஆக்குவேன்;␢ மண்ணகத்தின் மாபெரும்␢ மன்னன் ஆக்குவேன்.⁾ 29⁽அவனது வழிமரபை␢ என்றென்றும் நிலைநிறுத்துவேன்;␢ அவனது அரியணையை␢ வான்வெளி உள்ளவரை␢ நிலைக்கச் செய்வேன்.⁾
Reading II

திருத்தூதர் பணிகள் 13:16-17, 22-25

16அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். 17இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அந்நியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்; 22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ⁽“ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்”⁾ என்று சான்று பகர்ந்தார். 23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், “மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்” என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் “நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை” என்று கூறினார்.
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 1:1-25

1❮1-2❯⦅தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:⦆ ⁽ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;␢ ஈசாக்கின் மகன் யாக்கோபு;␢ யாக்கோபின் புதல்வர்கள்␢ யூதாவும் அவர் சகோதரர்களும்.⁾ 2Same as above 3⁽யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த␢ புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;␢ பெரேட்சின் மகன் எட்சரோன்;␢ எட்சரோனின் மகன் இராம்.*⁾ 4⁽இராமின் மகன் அம்மினதாபு;␢ அம்மினதாபின் மகன் நகசோன்;␢ நகசோனின் மகன் சல்மோன்.⁾ 5⁽சல்மோனுக்கும் இராகாபுக்கும்␢ பிறந்த மகன் போவாசு;␢ போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த␢ மகன் ஓபேது;␢ ஓபேதின் மகன் ஈசாய்.⁾ 6⁽ஈசாயின் மகன் தாவீது அரசர்;␢ தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்␢ பிறந்த மகன் சாலமோன்.⁾ 7⁽சாலமோனின் மகன் ரெகபயாம்;␢ ரெகபயாமின் மகன் அபியாம்;␢ அபியாமின் மகன் ஆசா.*⁾ 8⁽ஆசாவின் மகன் யோசபாத்து;␢ யோசபாத்தின் மகன் யோராம்;␢ யோராமின் மகன் உசியா.⁾ 9⁽உசியாவின் மகன் யோத்தாம்;␢ யோத்தாமின் மகன் ஆகாசு;␢ ஆகாசின் மகன் எசேக்கியா.⁾ 10⁽எசேக்கியாவின் மகன் மனாசே;␢ மனாசேயின் மகன் ஆமோன்;␢ ஆமோனின் மகன் யோசியா.⁾ 11⁽யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்* அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.⁾ 12⁽பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.⁾ 13⁽செருபாபேலின் மகன் அபியூது;␢ அபியூதின் மகன் எலியாக்கிம்;␢ எலியாக்கிமின் மகன் அசோர்.⁾ 14⁽அசோரின் மகன் சாதோக்கு;␢ சாதோக்கின் மகன் ஆக்கிம்;␢ ஆக்கிமின் மகன் எலியூது.⁾ 15₍எலியூதின் மகன் எலயாசர்;␢ எலயாசரின் மகன் மாத்தான்;␢ மாத்தானின் மகன் யாக்கோபு.₎ 16⁽யாக்கோபின் மகன்␢ மரியாவின் கணவர் யோசேப்பு.␢ மரியாவிடம் பிறந்தவரே␢ கிறிஸ்து* என்னும் இயேசு.⁾ 17⁽ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.⁾ 18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார். 22❮22-23❯⦃“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”⦄ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். 23Same as above 24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.