டிசம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

10 டிசம்பர், 2026

Thursday of the Second Week of Advent

அன்றைய திருப்பலி
Reading I

எசாயா 41:13-20

13⁽ஏனெனில் நானே␢ உன் கடவுளாகிய ஆண்டவர்;␢ உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,␢ “அஞ்சாதே, உனக்குத்␢ துணையாய் இருப்பேன்” என்று␢ உன்னிடம் சொல்பவரும் நானே.⁾ 14⁽“யாக்கோபு என்னும் புழுவே,␢ இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே,␢ அஞ்சாதிரு; நான் உனக்குத்␢ துணையாய் இருப்பேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.␢ இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.⁾ 15⁽இதோ, நான் உன்னைப்␢ புதிய கூர்மையான␢ போரடிக்கும் கருவியாக்குவேன்.␢ நீ மலைகளைப்␢ போரடித்து நொறுக்குவாய்;␢ குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.⁾ 16⁽அவற்றைத் தூற்றுவாய்,␢ காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்;␢ புயல் அவற்றைச் சிதறடிக்கும்;␢ ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்;␢ இஸ்ரயேலின் தூயவரில்␢ மேன்மை அடைவாய்.⁾ 17⁽ஏழைகளும் வறியோரும்␢ நீரைத் தேடுகின்றனர்;␢ அது கிடைக்கவில்லை.␢ அவர்கள் தாகத்தால்␢ நாவறண்டு போகின்றனர்;␢ ஆண்டவராகிய நான்␢ அவர்களுக்குப் பதிலளிப்பேன்;␢ இஸ்ரயேலின் கடவுளாகிய நான்␢ அவர்களைக் கைவிடமாட்டேன்.⁾ 18⁽பொட்டல் மேடுகளைப் பிளந்து␢ ஆறுகள் தோன்றச் செய்வேன்;␢ பள்ளத்தாக்குகளில்␢ நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்;␢ பாலைநிலத்தை␢ நீர்த் தடாகங்களாகவும்␢ வறண்ட நிலத்தை␢ நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.⁾ 19⁽பாலைநிலத்தில்␢ கேதுரு மரங்களை வளரச் செய்வேன்;␢ சித்திம் மரம், மிருதுச் செடி,␢ ஒலிவ மரம் ஆகியன␢ தோன்றச் செய்வேன்;␢ பாழ்நிலத்தில்␢ தேவதாரு மரங்களையும்,␢ புன்னை மரங்களையும்,␢ ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.⁾ 20⁽அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால்␢ இதைச்செய்தார் என்றும்␢ இஸ்ரயேலின் தூயவர்␢ அதைப் படைத்தார் என்றும்␢ மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;␢ ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 145:1 and 9, 10-11, 12-13

1⁽என் கடவுளே, என் அரசே!␢ உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் போற்றுவேன்.⁾ 9⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾ 10⁽ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்␢ உமக்கு நன்றி செலுத்தும்;␢ உம்முடைய அன்பர்கள்␢ உம்மைப் போற்றுவார்கள்.⁾ 11⁽அவர்கள் உமது அரசின் மாட்சியை␢ அறிவிப்பார்கள்;␢ உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.⁾ 12⁽மானிடர்க்கு␢ உம் வல்லமைச் செயல்களையும்␢ உமது அரசுக்குரிய␢ மாட்சியின் பேரொளியையும்␢ புலப்படுத்துவார்கள்.⁾ 13⁽உமது அரசு␢ எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;␢ உமது ஆளுகை␢ தலைமுறை தலைமுறையாக உள்ளது.␢ ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்␢ உண்மையானவர்;␢ தம் செயல்கள் அனைத்திலும்␢ தூய்மையானவர்.⁾
Alleluia

எசாயா 45:8

8⁽வானங்கள், பனிமழையென␢ வெற்றியை அனுப்பட்டும்;␢ மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்;␢ மண்ணுலகம் வாய்திறந்து␢ விடுதலைக்கனி வழங்கட்டும்,␢ அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்;␢ இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.⁾
Gospel

மத்தேயு 11:11-15

11மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 12திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.* 13திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. 14உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். 15கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.⒫