டிசம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

21 டிசம்பர், 2026

Monday of the Fourth Week of Advent

அன்றைய திருப்பலி
Reading I

இனிமைமிகு பாடல் 2:8-14

8⁽என் காதலர் குரல் கேட்கின்றது;␢ இதோ, அவர் வந்துவிட்டார்;␢ மலைகள்மேல் தாவி வருகின்றார்;␢ குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.⁾ 9⁽என் காதலர் கலைமானுக்கு அல்லது␢ மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.␢ இதோ, எம் மதிற்சுவர்க்குப்␢ பின்னால் நிற்கின்றார்;␢ பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்;␢ பின்னல் தட்டி வழியாய்␢ நோக்குகின்றார்.⁾ 10⁽என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:␢ “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.⁾ 11⁽இதோ, கார்காலம் கடந்துவிட்டது;␢ மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.⁾ 12⁽நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;␢ பாடி மகிழும் பருவம் வந்துற்றது;␢ காட்டுப் புறா கூவும் குரலதுவோ␢ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது;⁾ 13⁽அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;␢ திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;␢ விரைந்தெழு, என் அன்பே!␢ என் அழகே! விரைந்து வா.”⁾ 14⁽பாறைப் பிளவுகளில் இருப்பவளே,␢ குன்றின் வெடிப்புகளில் இருக்கும்␢ என் வெண்புறாவே!␢ காட்டிடு எனக்கு உன் முகத்தை;␢ எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.␢ உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!⁾
Reading I - Alternative

செப்பனியா 3:14-18

14⁽மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;␢ இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;␢ மகளே எருசலேம்!␢ உன் முழு உள்ளத்தோடு␢ அகமகிழ்ந்து அக்களி.⁾ 15⁽ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்␢ தள்ளிவிட்டார்;␢ உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;␢ இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்␢ உன் நடுவில் இருக்கின்றார்;␢ நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.⁾ 16⁽அந்நாளில் எருசலேமை நோக்கி␢ இவ்வாறு கூறப்படும்:␢ “சீயோனே, அஞ்சவேண்டாம்;␢ உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.⁾ 17⁽உன் கடவுளாகிய ஆண்டவர்␢ உன் நடுவில் இருக்கின்றார்;␢ அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;␢ உன்பொருட்டு அவர் மகிழ்ந்து␢ களிகூருவார்;␢ தம் அன்பினால் உனக்குப்␢ புத்துயிர் அளிப்பார்;␢ உன்னைக் குறித்து␢ மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.⁾ 18⁽அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.␢ உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;␢ ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 33:2-3, 11-12, 20-21

2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾ 3⁽புத்தம்புது பாடல் ஒன்றை␢ அவருக்குப் பாடுங்கள்;␢ திறம்பட இசைத்து␢ மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.⁾ 11⁽ஆண்டவரின் எண்ணங்களோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவரது உள்ளத்தின் திட்டங்கள்␢ தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.⁾ 12⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾ 20⁽நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;␢ அவரே நமக்குத் துணையும் § கேடயமும் ஆவார்.⁾ 21⁽நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;␢ ஏனெனில், அவரது திருப்பெயரில்␢ நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.⁾
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 1:39-45

39அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். 41மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 45ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.