டிசம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

13 டிசம்பர், 2026

Third Sunday of Advent

அன்றைய திருப்பலி
Reading I

எசாயா 61:1-2, 10-11

1⁽ஆண்டவராகிய என் தலைவரின்␢ ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள் பொழிவு செய்துள்ளார்;␢ ஒடுக்கப்பட்டோருக்கு␢ நற்செய்தியை அறிவிக்கவும்,␢ உள்ளம் உடைந்தோரைக்␢ குணப்படுத்தவும்,␢ சிறைப்பட்டோருக்கு␢ விடுதலையைப் பறைசாற்றவும்,␢ கட்டுண்டோருக்கு␢ விடிவைத் தெரிவிக்கவும்␢ என்னை அனுப்பியுள்ளார்.⁾ 2⁽ஆண்டவர் அருள்தரும்␢ ஆண்டினை முழங்கவும்,␢ நம் கடவுள் அநீதிக்குப்␢ பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,␢ துயருற்று அழுவோர்க்கு␢ ஆறுதல் அளிக்கவும்,⁾ 10⁽ஆண்டவரில் நான்␢ பெருமகிழ்ச்சி அடைவேன்;␢ என் கடவுளில்␢ என் உள்ளம் பூரிப்படையும்;␢ மலர்மாலை அணிந்த மணமகன் போலும்,␢ நகைகளால் அழகுபடுத்தப்பட்ட␢ மணமகள் போலும்,␢ விடுதலை என்னும் உடைகளை␢ அவர் எனக்கு உடுத்தினார்;␢ நேர்மை என்னும் ஆடையை␢ எனக்கு அணிவித்தார்.⁾ 11⁽நிலம் முளைகளைத்␢ துளிர்க்கச் செய்வது போன்றும்,␢ தோட்டம் விதைகளை␢ முளைக்கச் செய்வது போன்றும்,␢ ஆண்டவராகிய என் தலைவர்␢ பிற இனத்தார் பார்வையில்␢ நேர்மையும் புகழ்ச்சியும்␢ துளிர்த்தெழச் செய்வார்.⁾
Responsorial Psalm

லூக்கா 1:46-48, 49-50, 53-54

46⦅அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:⦆ 47⁽“ஆண்டவரை எனது உள்ளம்␢ போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.␢ என் மீட்பராம் கடவுளை நினைத்து␢ எனது மனம் பேருவகை கொள்கின்றது.⁾ 48⁽ஏனெனில், அவர் தம் அடிமையின்␢ தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.␢ இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்␢ என்னைப் பேறுபெற்றவர் என்பர்.⁾ 49⁽ஏனெனில், வல்லவராம் கடவுள்␢ எனக்கு அரும்பெரும் செயல்கள்␢ செய்துள்ளார்.␢ தூயவர் என்பதே அவரது பெயர்.⁾ 50❮50-53❯⁽அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்␢ தலைமுறை தலைமுறையாய் அவர்␢ இரக்கம் காட்டி வருகிறார்.␢ அவர் தம் தோள் வலிமையைக்␢ காட்டியுள்ளார்;␢ உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்␢ சிதறடித்து வருகிறார்.␢ வலியோரை அரியணையினின்று␢ தூக்கி எறிந்துள்ளார்;␢ தாழ்நிலையில் இருப்போரை␢ உயர்த்துகிறார்.␢ பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;␢ செல்வரை வெறுங்கையராய்␢ அனுப்பிவிடுகிறார்.⁾ 53Same as above 54❮54-55❯⁽மூதாதையருக்கு உரைத்தபடியே␢ அவர் ஆபிரகாமையும்␢ அவர்தம் வழி மரபினரையும்␢ என்றென்றும் இரக்கத்தோடு␢ நினைவில் கொண்டுள்ளார்;␢ தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்␢ துணையாக இருந்து வருகிறார்”.⁾⒫
Reading II

1 தெசலோனிக்கர் 5:16-24

16எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். 17இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். 18எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே⒫. 19தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். 20இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். 21அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். 22எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். 23அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! 24உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.⒫
Alleluia

எசாயா 61:1

1⁽ஆண்டவராகிய என் தலைவரின்␢ ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள் பொழிவு செய்துள்ளார்;␢ ஒடுக்கப்பட்டோருக்கு␢ நற்செய்தியை அறிவிக்கவும்,␢ உள்ளம் உடைந்தோரைக்␢ குணப்படுத்தவும்,␢ சிறைப்பட்டோருக்கு␢ விடுதலையைப் பறைசாற்றவும்,␢ கட்டுண்டோருக்கு␢ விடிவைத் தெரிவிக்கவும்␢ என்னை அனுப்பியுள்ளார்.⁾
Gospel

யோவான் 1:6-8, 19-28

6⁽கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்;␢ அவர் பெயர் யோவான்.⁾ 7⁽அவர் சான்று பகருமாறு வந்தார்.␢ அனைவரும் தம் வழியாக நம்புமாறு␢ அவர் ஒளியைக் குறித்துச்␢ சான்று பகர்ந்தார்.⁾ 8⁽அவர் அந்த ஒளி அல்ல;␢ மாறாக, ஒளியைக் குறித்துச்␢ சான்று பகர வந்தவர்.⁾ 19எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். 20இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். 21அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார் “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். 22அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். 23அதற்கு அவர், ⁽“‘ஆண்டவருக்காக வழியைச்␢ செம்மையாக்குங்கள் எனப்␢ பாலைநிலத்தில்␢ குரல் ஒன்று கேட்கிறது’⁾ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார். 24பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் 25அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். 26யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; 27அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். 28இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.⒫