டிசம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

24 டிசம்பர், 2026

Thursday of the Fourth Week of AdventMass in the Morning

அன்றைய திருப்பலி
Reading I

2 சாமுவேல் 7:1-5, 8-12, 14, 16

1அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். 2அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார். 3அதற்கு நாத்தான், “நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார். 4அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: 5“நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: ‘நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? 8எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். 9நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும், உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். 10❮10-11❯எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். 11Same as above 12உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். 14நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். 16என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!’⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 89:2-3, 4-5, 27 and 29

2⁽உமது பேரன்பு␢ என்றென்றும் நிலைத்துள்ளது என்று␢ அறிவிப்பேன்;␢ உமது உண்மை வானைப்போல்␢ உறுதியானது.⁾ 3⁽நீர் உரைத்தது:␢ ‛நான் தேர்ந்துகொண்டவனோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டேன்;␢ என் ஊழியன் தாவீதுக்கு␢ ஆணையிட்டு நான் கூறியது:⁾ 4⁽உன் வழிமரபை␢ என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;␢ உன் அரியணையைத்␢ தலைமுறை தலைமுறையாக␢ நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா)⁾ 5⁽ஆண்டவரே, வானங்கள்␢ உம் வியத்தகு செயல்களைப் § புகழ்கின்றன;␢ தூயவர் குழுவினில்␢ உமது உண்மை விளங்கும்.⁾ 27⁽நான் அவனை␢ என் தலைப்பேறு ஆக்குவேன்;␢ மண்ணகத்தின் மாபெரும்␢ மன்னன் ஆக்குவேன்.⁾ 29⁽அவனது வழிமரபை␢ என்றென்றும் நிலைநிறுத்துவேன்;␢ அவனது அரியணையை␢ வான்வெளி உள்ளவரை␢ நிலைக்கச் செய்வேன்.⁾
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 1:67-79

67⦅பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு:⦆ 68⁽“இஸ்ரயேலின் கடவுளாகிய␢ ஆண்டவரைப் போற்றுவோம்.␢ ஏனெனில், அவர் தம் மக்களைத்␢ தேடிவந்து விடுவித்தருளினார்.⁾ 69❮69-70❯⁽தம் தூய இறைவாக்கினர் வாயினால்␢ தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே␢ அவர் தம் ஊழியராகிய␢ தாவீதின் குடும்பத்தில்␢ வல்லமை உடைய மீட்பர் ஒருவர்␢ நமக்காகத் தோன்றச் செய்தார்;⁾ 70Same as above 71⁽நம் பகைவரிடமிருந்தும்␢ நம்மை வெறுப்போர் அனைவரின்␢ பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.⁾ 72❮72-73❯⁽அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,␢ தமது தூய உடன்படிக்கையையும்,␢ நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு␢ அவர் இட்ட ஆணையையும்␢ நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.⁾ 73Same as above 74❮74-75❯⁽இவ்வாறு நாம் பகைவரின்␢ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்␢ தூய்மையோடும் நேர்மையோடும்␢ வாழ்நாளெல்லாம் அச்சமின்றி␢ அவர் திருமுன் பணிசெய்யுமாறு␢ வழிவகுத்தார்.⁾ 75Same as above 76❮76-77❯⁽குழந்தாய், நீ உன்னத கடவுளின்␢ இறைவாக்கினர் எனப்படுவாய்;␢ ஏனெனில், பாவ மன்னிப்பால்␢ வரும் மீட்பை␢ அவர்தம் மக்களுக்கு அறிவித்து␢ ஆண்டவருக்கான␢ வழியைச் செம்மைப்படுத்த␢ அவர் முன்னே செல்வாய்.⁾ 77Same as above 78❮78-79❯⁽இருளிலும் இறப்பின் பிடியிலும்␢ இருப்போர்க்கு ஒளிதரவும்,␢ நம்முடைய கால்களை␢ அமைதி வழியில் நடக்கச் செய்யவும்␢ நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும்␢ இரக்கத்தாலும்␢ விண்ணிலிருந்து விடியல்␢ நம்மைத் தேடிவருகிறது.⁾”⒫ 79Same as above