வாசகங்கள்
26 டிசம்பர், 2026
Feast of Saint Stephen, First Martyr
அன்றைய திருப்பலி
Reading I
திருத்தூதர் பணிகள் 6:8-10; 7:54-59
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 31:3-4, 6 and 8, 16 and 17
3⁽ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;␢ உமது பெயரின் பொருட்டு␢ எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.⁾
4⁽அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள␢ வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;␢ ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.⁾
6⁽நானோ, பயனற்ற சிலைகளில்␢ பற்றுடையோரை வெறுத்து,␢ ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.⁾
8⁽என் எதிரியின் கையில்␢ என்னை நீர் விட்டுவிடவில்லை;␢ அகன்ற இடத்தில் என்னைக்␢ காலூன்றி நிற்கவைத்தீர்.⁾
16⁽உமது முகத்தின் ஒளி␢ அடியேன் மீது வீசும்படி செய்யும்;␢ உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.⁾
17⁽ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;␢ என்னை வெட்கமுற விடாதேயும்;␢ பொல்லார் வெட்கிப்போவார்களாக!␢ பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!⁾
Alleluia
திருப்பாடல்கள் 118:26, 27
26⁽ஆண்டவரின் பெயரால் வருபவர்␢ ஆசி பெற்றவர்!␢ ஆண்டவரது இல்லத்தினின்று␢ உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.⁾
27⁽ஆண்டவரே இறைவன்;␢ அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;␢ கிளைகளைக் கையிலேந்தி␢ விழாவினைத் தொடங்குங்கள்;␢ பீடத்தின் கொம்புகள்வரை␢ பவனியாகச் செல்லுங்கள்.⁾
Gospel
மத்தேயு 10:17-22
17எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
18என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
19இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.
21சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள்.
22என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.