வாசகங்கள்
17 டிசம்பர், 2026
Thursday of the Third Week of Advent
அன்றைய திருப்பலி
Reading I
தொடக்க நூல் 49:2, 8-10
2⁽கூடிவந்து உற்றுக்கேளுங்கள்;␢ யாக்கோபின் புதல்வர்களே!␢ உங்கள் தந்தையாகிய␢ இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.⁾
8⁽யூதா! உன் உடன்பிறந்தோர்␢ உன்னைப் புகழ்வர்.␢ உன் கை உன் எதிரிகளின்␢ கழுத்தில் இருக்கும்.␢ உன் தந்தையின் புதல்வர்␢ உன்னை வணங்குவர்.⁾
9⁽யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி,␢ என் மகனே,␢ இரை கவர்ந்து வந்துள்ளாய்!␢ ஆண் சிங்கமென,␢ பெண் சிங்கமென,␢ அவன் கால் மடக்கிப் படுப்பான்;␢ அவன் துயில் கலைக்கத்␢ துணிந்தவன் எவன்?⁾
10⁽அரசுரிமை உடையவர் வரும்வரையில்␢ மக்களினங்கள் அவருக்குப்␢ பணிந்திடும் வரையில்,␢ யூதாவைவிட்டுச்␢ செங்கோல் நீங்காது;␢ அவன் மரபை விட்டுக்␢ கொற்றம் மறையாது.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 72:1-2, 3-4, 7-8, 17
1⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾
2⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾
3⁽மலைகள் மக்களுக்குச்␢ சமாதானத்தைக் கொடுக்கட்டும்;␢ குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.⁾
4⁽எளியோரின் மக்களுக்கு␢ அவர் நீதி வழங்குவாராக!␢ ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக;␢ பிறரை ஒடுக்குவோரை␢ நொறுக்கி விடுவாராக!⁾
7⁽அவர் காலத்தில்␢ நீதி தழைத்தோங்குவதாக;␢ நிலா உள்ள வரையில்␢ மிகுந்த சமாதானம் நிலவுவதாக.⁾
8⁽ஒரு கடலிலிருந்து␢ அடுத்த கடல்வரைக்கும்␢ அவர் ஆட்சி செலுத்துவார்;␢ பேராற்றிலிருந்து␢ உலகின் எல்லை வரைக்கும்␢ அவர் அரசாள்வார்.⁾
17⁽அவர் பெயர்␢ என்றென்றும் நிலைத்திருப்பதாக!␢ கதிரவன் உள்ளவரையில்␢ அவர் பெயர் நிலைப்பதாக!␢ அவர்மூலம் மனிதர்␢ ஆசிபெற விழைவராக!␢ எல்லா நாட்டினரும் அவரை␢ நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!⁾
Alleluia
:-
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மத்தேயு 1:1-17
1❮1-2❯⦅தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:⦆ ⁽ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;␢ ஈசாக்கின் மகன் யாக்கோபு;␢ யாக்கோபின் புதல்வர்கள்␢ யூதாவும் அவர் சகோதரர்களும்.⁾
2Same as above
3⁽யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த␢ புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;␢ பெரேட்சின் மகன் எட்சரோன்;␢ எட்சரோனின் மகன் இராம்.*⁾
4⁽இராமின் மகன் அம்மினதாபு;␢ அம்மினதாபின் மகன் நகசோன்;␢ நகசோனின் மகன் சல்மோன்.⁾
5⁽சல்மோனுக்கும் இராகாபுக்கும்␢ பிறந்த மகன் போவாசு;␢ போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த␢ மகன் ஓபேது;␢ ஓபேதின் மகன் ஈசாய்.⁾
6⁽ஈசாயின் மகன் தாவீது அரசர்;␢ தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்␢ பிறந்த மகன் சாலமோன்.⁾
7⁽சாலமோனின் மகன் ரெகபயாம்;␢ ரெகபயாமின் மகன் அபியாம்;␢ அபியாமின் மகன் ஆசா.*⁾
8⁽ஆசாவின் மகன் யோசபாத்து;␢ யோசபாத்தின் மகன் யோராம்;␢ யோராமின் மகன் உசியா.⁾
9⁽உசியாவின் மகன் யோத்தாம்;␢ யோத்தாமின் மகன் ஆகாசு;␢ ஆகாசின் மகன் எசேக்கியா.⁾
10⁽எசேக்கியாவின் மகன் மனாசே;␢ மனாசேயின் மகன் ஆமோன்;␢ ஆமோனின் மகன் யோசியா.⁾
11⁽யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்* அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.⁾
12⁽பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.⁾
13⁽செருபாபேலின் மகன் அபியூது;␢ அபியூதின் மகன் எலியாக்கிம்;␢ எலியாக்கிமின் மகன் அசோர்.⁾
14⁽அசோரின் மகன் சாதோக்கு;␢ சாதோக்கின் மகன் ஆக்கிம்;␢ ஆக்கிமின் மகன் எலியூது.⁾
15₍எலியூதின் மகன் எலயாசர்;␢ எலயாசரின் மகன் மாத்தான்;␢ மாத்தானின் மகன் யாக்கோபு.₎
16⁽யாக்கோபின் மகன்␢ மரியாவின் கணவர் யோசேப்பு.␢ மரியாவிடம் பிறந்தவரே␢ கிறிஸ்து* என்னும் இயேசு.⁾
17⁽ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.⁾