டிசம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

11 டிசம்பர், 2026

Friday of the Second Week of Advent

அன்றைய திருப்பலி
Reading I

எசாயா 48:17-19

17⁽இஸ்ரயேலின் தூயவரும்␢ உன் மீட்பருமான ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!␢ பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும்␢ செல்லவேண்டிய வழியில்␢ உன்னை நடத்துபவரும் நானே!⁾ 18⁽என் கட்டளைக்குச்␢ செவிசாய்த்திருப்பாயானால்,␢ உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும்,␢ உன் வெற்றி கடல் அலை போலும்,␢ பாய்ந்து வந்திருக்கும்.⁾ 19⁽உன் வழிமரபினர் மணல் அளவாயும்,␢ உன் வழித்தோன்றல்கள்␢ கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்;␢ அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்;␢ அவர்கள் பெயர் என் திருமுன்னின்று␢ அழிக்கப்பட்டிராது.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 1:1-2, 3, 4 and 6

1⁽நற்பேறு பெற்றவர் யார்? – அவர்␢ பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;␢ பாவிகளின் தீயவழி நில்லாதவர்;␢ இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;⁾ 2⁽ஆனால், அவர் ஆண்டவரின்␢ திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;␢ அவரது சட்டத்தைப்பற்றி␢ இரவும் பகலும் சிந்திப்பவர்;⁾ 3⁽அவர் நீரோடையோரம் நடப்பட்ட␢ மரம் போல் இருப்பார்;␢ பருவகாலத்தில் கனிதந்து,␢ என்றும் பசுமையாய் இருக்கும்␢ அம்மரத்திற்கு ஒப்பாவார்;␢ தாம் செய்வதனைத்திலும்␢ வெற்றி பெறுவார்.⁾ 4⁽ஆனால், பொல்லார் அப்படி இல்லை;␢ அவர்கள் காற்று அடித்துச் செல்லும்␢ பதரைப்போல் ஆவர்.⁾ 6⁽நேர்மையாளரின் நெறியை␢ ஆண்டவர் கருத்தில் கொள்வார்;␢ பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.⁾
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 11:16-19

16❮16-17❯“இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். 17Same as above 18எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். 19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”