வாசகங்கள்
3 டிசம்பர், 2026
Memorial of Saint Francis Xavier, Priest
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 26:1-6
1⁽அந்நாளில் யூதா நாட்டில் இந்தப்␢ பாடல் பாடப்படும்: நமக்கொரு␢ வலிமைமிகு நகர் உண்டு;␢ நம்மைக் காக்க அவர்␢ கொத்தளங்களை அமைத்துள்ளார்;⁾
2⁽வாயில்களைத் திறந்துவிடுங்கள்;␢ அவர்மீது நம்பிக்கை கொண்ட␢ நேர்மையான மக்களினம்␢ உள்ளே வரட்டும்.⁾
3⁽அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்;␢ உம்மீது நம்பிக்கை உடையவர்கள்;␢ அவர்களை அமைதியால்␢ நீர் உறுதிப்படுத்துகின்றீர்.⁾
4⁽ஆண்டவர்மீது என்றென்றும்␢ நம்பிக்கை கொள்ளுங்கள்;␢ ஏனெனில், ஆண்டவர்,␢ என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!⁾
5⁽உயரத்தில் வாழ்வோரை␢ அவர் தாழ்த்துகின்றார்;␢ வானுற உயர்ந்த நகரைத்␢ தகர்க்கின்றார்;␢ அதைத் தரைமட்டமாக்கி,␢ புழுதியோடு புழுதியாக,␢ மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார்.⁾
6⁽காலடிகள் — எளியோரின் காலடிகளும்␢ ஏழைகளின் பாதங்களும் —␢ அதை மிதிக்கும்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 118:1 and 8-9, 19-21, 25-27
1⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்.␢ ஏனெனில் அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
8⁽மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,␢ ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!⁾
9⁽உயர்குடியினர் மீது␢ நம்பிக்கை வைப்பதைவிட,␢ ஆண்டவரிடம்␢ அடைக்கலம் புகுவதே நலம்!⁾
19⁽நீதிமான்கள் செல்லும் வாயில்களை␢ எனக்குத் திறந்து விடுங்கள்;␢ அவற்றினுள் நுழைந்து நான்␢ ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.⁾
20⁽ஆண்டவரது வாயில் இதுவே!␢ இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.⁾
21⁽என் மன்றாட்டை நீர் கேட்டதால்,␢ எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.⁾
25⁽ஆண்டவரே! மீட்டருளும்!␢ ஆண்டவரே! வெற்றிதாரும்!⁾
26⁽ஆண்டவரின் பெயரால் வருபவர்␢ ஆசி பெற்றவர்!␢ ஆண்டவரது இல்லத்தினின்று␢ உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.⁾
27⁽ஆண்டவரே இறைவன்;␢ அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;␢ கிளைகளைக் கையிலேந்தி␢ விழாவினைத் தொடங்குங்கள்;␢ பீடத்தின் கொம்புகள்வரை␢ பவனியாகச் செல்லுங்கள்.⁾
Alleluia
எசாயா 55:6
6⁽ஆண்டவரைக் காண்பதற்கு␢ வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்;␢ அவர் அண்மையில் இருக்கும்போதே␢ அவரை நோக்கி மன்றாடுங்கள்.⁾
Gospel
மத்தேயு 7:21, 24-27
21என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
24“ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
25மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
26நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.
27மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”⒫