வாசகங்கள்
22 டிசம்பர், 2026
Tuesday of the Fourth Week of Advent
அன்றைய திருப்பலி
Reading I
1 சாமுவேல் 1:24-28
24அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்.
25அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.
26பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.
27இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.
28ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள்* ஆண்டவரைத் தொழுதார்கள்.
Responsorial Psalm
1 சாமுவேல் 2:1, 4-5, 6-7, 8
1⁽அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது:␢ “ஆண்டவரை முன்னிட்டு␢ என் இதயம் மகிழ்கின்றது!␢ ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!␢ என் வாய் என் எதிரிகளைப்␢ பழிக்கின்றது!␢ ஏனெனில், நான் நீர் அளிக்கும்␢ மீட்பில் களிப்படைகிறேன்.⁾
4⁽வலியோரின் வில்கள்␢ உடைபடுகின்றன! தடுமாறினோர்␢ வலிமை பெறுகின்றனர்!⁾
5⁽நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு␢ உணவு பெறுகின்றனர்.␢ பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார்␢ ஆகியுள்ளனர்!␢ மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள்,␢ பல புதல்வரைப் பெற்றவளோ␢ தனியள் ஆகின்றாள்!⁾
6⁽ஆண்டவர் கொல்கிறார்;␢ உயிரும் தருகின்றார்;␢ பாதாளத்தில் தள்ளுகிறார்;␢ உயர்த்துகின்றார்;⁾
7⁽ஆண்டவர் ஏழையாக்குகிறார்;␢ செல்வராக்குகின்றார்;␢ தாழ்த்துகின்றார்;␢ மேன்மைப்படுத்துகின்றார்;⁾
8⁽புழுதியினின்று அவர்␢ ஏழைகளை உயர்த்துகின்றார்;␢ குப்பையினின்று வறியவரைத்␢ தூக்கிவிடுகின்றார்;␢ உயர்குடியினரோடு அவர்களை␢ அமர்த்துகின்றார்!␢ மாண்புறு அரியணையை அவர்␢ களுக்கு உரிமையாக்குகின்றார்!␢ உலகின் அடித்தளங்கள்␢ ஆண்டவருக்கு உரியவை!␢ அவற்றின் மேல் அவர்␢ உலகை நிறுவினார்!⁾
Alleluia
:-
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 1:46-56
46⦅அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:⦆
47⁽“ஆண்டவரை எனது உள்ளம்␢ போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.␢ என் மீட்பராம் கடவுளை நினைத்து␢ எனது மனம் பேருவகை கொள்கின்றது.⁾
48⁽ஏனெனில், அவர் தம் அடிமையின்␢ தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.␢ இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்␢ என்னைப் பேறுபெற்றவர் என்பர்.⁾
49⁽ஏனெனில், வல்லவராம் கடவுள்␢ எனக்கு அரும்பெரும் செயல்கள்␢ செய்துள்ளார்.␢ தூயவர் என்பதே அவரது பெயர்.⁾
50❮50-53❯⁽அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்␢ தலைமுறை தலைமுறையாய் அவர்␢ இரக்கம் காட்டி வருகிறார்.␢ அவர் தம் தோள் வலிமையைக்␢ காட்டியுள்ளார்;␢ உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்␢ சிதறடித்து வருகிறார்.␢ வலியோரை அரியணையினின்று␢ தூக்கி எறிந்துள்ளார்;␢ தாழ்நிலையில் இருப்போரை␢ உயர்த்துகிறார்.␢ பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;␢ செல்வரை வெறுங்கையராய்␢ அனுப்பிவிடுகிறார்.⁾
51Same as above
52Same as above
53Same as above
54❮54-55❯⁽மூதாதையருக்கு உரைத்தபடியே␢ அவர் ஆபிரகாமையும்␢ அவர்தம் வழி மரபினரையும்␢ என்றென்றும் இரக்கத்தோடு␢ நினைவில் கொண்டுள்ளார்;␢ தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்␢ துணையாக இருந்து வருகிறார்”.⁾⒫
55Same as above
56மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.