ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

4 ஜூலை, 2027

Fourteenth Sunday in Ordinary Time.

அன்றைய திருப்பலி
First Reading

எசேக்கியேல் 2: 2-5

2அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். 3அவர் என்னிடம், “மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்” என்றார். 4“வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், ‘தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே’ என்று சொல். 5கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 123: 1-2, 2, 3-4

1⁽விண்ணுலகில் வீற்றிருப்பவரே!␢ உம்மை நோக்கியே என்␢ கண்களை உயர்த்தியுள்ளேன்.⁾ 2⁽பணியாளனின் கண்கள்␢ தன் தலைவனின் கைதனை␢ நோக்கியிருப்பதுபோல,␢ பணிப்பெண்ணின் கண்கள்␢ தன் தலைவியின் கைதனை␢ நோக்கியிருப்பதுபோல,␢ எம் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எமக்கு இரங்கும்வரை,␢ எம் கண்கள்␢ உம்மையே நோக்கியிருக்கும்.⁾ 3⁽எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே!␢ எங்களுக்கு இரங்கும்;␢ அளவுக்கு மேலேயே நாங்கள்␢ இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.⁾ 4⁽இன்பத்தில் திளைத்திருப்போரின் ␢ வசைமொழி போதும். ␢ இறுமாந்த மனிதரின்␢ பழிச்சொல்லும் போதும்.⁾
Second Reading

2 கொரிந்தியர் 12: 7-10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

லூக்கா 4: 18

18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
Gospel

மாற்கு 6: 1-6

1அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். 2ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! 3இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். 4இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். 5அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. 6[a]அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். ⒯[b]அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.