ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

5 ஜூலை, 2027

Ordinary Weekday/ Anthony Mary Zaccaria, Priest, Religious Founder/ Elizabeth of Portugal, Married Woman

Elizabeth of Portugal, Married Woman
First Reading

தொடக்க நூல் 28: 10-22a

10யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, கரானை நோக்கிச் சென்றான். 11அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே, அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான். 12அப்போது அவன் கண்ட கனவு இதுவே; நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். 13ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, ⁽“உன் மூதாதையராகிய ஆபிரகாம்,␢ ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர்␢ நானே. நீ படுத்திருக்கும் இந்த␢ நிலத்தை உனக்கும் உன்␢ வழிமரபிற்கும் தந்தருள்வேன்.⁾ 14⁽உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு␢ ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு,␢ தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய்.␢ உன்னிலும் உன் வழிமரபிலும்␢ மண்ணுலகின் எல்லா இனங்களும்␢ ஆசி பெறுவன.⁾ 15⁽நான் உன்னோடு இருப்பேன்.␢ நீ எங்கு சென்றாலும் உனக்கு நான்␢ காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத்␢ திரும்பி வரச் செய்வேன்.␢ ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை␢ நிறைவேற்றுமளவும் உன்னைக்␢ கைவிடமாட்டேன்” என்றார்.⁾⒫ 16யாக்கோபு தூக்கம் தெளிந்து, “உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்” என்று 17அச்சமடைந்து, “இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்” என்றார். 18பிறகு, யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து, 19‘லூசு’ என்று வழங்கிய அந்த நகருக்குப் ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார். 20மேலும், அவர் நேர்ந்து கொண்டது: ‘கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து, 21என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார். 22மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.’
Responsorial Psalm

திருப்பாடல்கள் 91: 1-2, 3-4, 14-15ab

1⁽உன்னதரின் பாதுகாப்பில்␢ வாழ்பவர், எல்லாம் வல்லவரின்␢ நிழலில் தங்கியிருப்பவர்.⁾ 2⁽ஆண்டவரை நோக்கி,␢ “நீரே என் புகலிடம்; என் அரண்;␢ நான் நம்பியிருக்கும் இறைவன்”␢ என்று உரைப்பார்.⁾ 3⁽ஏனெனில், ஆண்டவர் உம்மை␢ வேடரின் கண்ணியினின்றும்␢ கொன்றழிக்கும்␢ கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.⁾ 4⁽அவர் தம் சிறகுகளால்␢ உம்மை அரவணைப்பார்;␢ அவர்தம் இறக்கைகளின்கீழ்␢ நீர் புகலிடம் காண்பீர்;␢ அவரது உண்மையே␢ கேடயமும் கவசமும் ஆகும்.⁾ 14⁽‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,␢ அவர்களை விடுவிப்பேன்;␢ அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,␢ அவர்களைப் பாதுகாப்பேன்;⁾ 15⁽அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது,␢ அவர்களுக்குப் பதிலளிப்பேன்;␢ அவர்களது துன்பத்தில்␢ அவர்களோடு இருப்பேன்;␢ அவர்களைத் தப்புவித்து␢ அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;⁾
Alleluia

2 திமொத்தேயு 1: 10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 9: 18-26

18அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். 19இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். 20அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். 21ஏனெனில், அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார். 22இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். 23இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். 24அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். 25அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர்பெற்று எழுந்தாள். 26இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.