வாசகங்கள்
12 ஜூலை, 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
விடுதலைப் பயணம் 1: 8-14, 22
8இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
9அவன் தன் குடிமக்களை நோக்கி, “இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
10அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில், போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்; நம்மை எதிர்த்துப் போரிடுவர்; இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்” என்று கூறினான்.
11எனவே, கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
12ஆயினும், எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால், எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.
13எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்;
14கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.⒫
22பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, “பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்” என்று அறிவித்தான்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 124: 1b-3, 4-6, 7-8
1⁽ஆண்டவர் நம் சார்பாக␢ இருந்திராவிடில் –␢ இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!⁾
2⁽ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,␢ நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,⁾
3⁽அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,␢ அவர்கள் நம்மை␢ உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.⁾
4⁽அப்பொழுது, வெள்ளம்␢ நம்மை மூழ்கடித்திருக்கும்;␢ பெருவெள்ளம் நம்மீது␢ புரண்டோடியிருக்கும்;⁾
5⁽கொந்தளிக்கும் வெள்ளம்␢ நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.⁾
6⁽ஆண்டவர் போற்றி! போற்றி!␢ எதிரிகளின் பற்களுக்கு␢ அவர் நம்மை இரையாக்கவில்லை.⁾
7⁽வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த␢ பறவைபோல் ஆனோம்;␢ கண்ணி அறுந்தது;␢ நாம் தப்பிப் பிழைத்தோம்.⁾
8⁽ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!␢ விண்ணையும் மண்ணையும்␢ உண்டாக்கியவர் அவரே!⁾
Alleluia
மத்தேயு 5: 10
10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾
Gospel
மத்தேயு 10: 34 - 11: 1
34“நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
35தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.
36ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
37என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
38தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
39தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
40“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.
41இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
42இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
1இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.