ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

17 ஜூலை, 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

விடுதலைப் பயணம் 12: 37-42

37இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர். 38மேலும், அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன. 39எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவைக்கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில், மாவு இன்னும் புளிக்காமலிருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற்போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை! 40எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்! 41நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது. 42எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 136: 1 and 23-24, 10-12, 13-15

1⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்.␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 23⁽தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு␢ கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 24⁽நம் எதிரிகளினின்று நம்மை␢ விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 10⁽எகிப்தின் தலைப்பேறுகளைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 11⁽அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை␢ வெளிக்கொணர்ந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 12⁽தோளின் வலிமையாலும்␢ ஓங்கிய புயத்தாலும் அதைச்␢ செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 13⁽செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 14⁽அதன் நடுவே இஸ்ரயேலை␢ நடத்திச் சென்றவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 15⁽பார்வோனையும் அவன் படைகளையும்␢ செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
Alleluia

2 கொரிந்தியர் 5: 19

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 12: 14-21

14பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். 15இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார். 16தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். 17இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின; 18⁽“இதோ என் ஊழியர்;␢ இவர் நான் தேர்ந்துகொண்டவர்.␢ இவரே என் அன்பர்;␢ இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது;␢ இவருள் என் ஆவி␢ தங்கும்படி செய்தேன்;␢ இவர் மக்களினங்களுக்கு␢ நீதியை அறிவிப்பார்.⁾ 19⁽இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்;␢ கூக்குரலிடமாட்டார்;␢ தம் குரலைத் தெருவில்␢ எழுப்பவுமாட்டார்;␢ நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,⁾ 20⁽நெரிந்த நாணலை முறியார்;␢ புகையும் திரியை அணையார்.⁾ 21⁽எல்லா மக்களினங்களும்␢ இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.”⁾