ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

30 ஜூலை, 2027

Ordinary Weekday/ Peter Chrysologus, Bishop, Doctor

Peter Chrysologus, Bishop, Doctor
First Reading

லேவியர் 23: 1, 4-11, 15-16, 27, 34b-37

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 4நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன; 5முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. 6அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழுநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். 7பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. 8ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. 9ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 10இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது; நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். 11உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். 15ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். 16ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். 27அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். 34நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது; ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். 35முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம். 36ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.⒫ 37ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,
Responsorial Psalm

திருப்பாடல்கள் 81: 3-4, 5-6, 10-11ab

3⁽அமாவாசையில், பௌர்ணமியில்,␢ நமது திருவிழாநாளில் § எக்காளம் ஊதுங்கள்.⁾ 4⁽இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை;␢ யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.⁾ 5⁽அவர் எகிப்துக்கு எதிராகச்␢ சென்றபொழுது␢ யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே.␢ அப்பொழுது நான்␢ அறியாத மொழியைக் கேட்டேன்.⁾ 6⁽தோளினின்று உன் சுமையை␢ அகற்றினேன்;␢ உன் கைகள் கூடையினின்று␢ விடுதலை பெற்றன.⁾ 10⁽உங்களை எகிப்து நாட்டினின்று␢ அழைத்துவந்த␢ கடவுளாகிய ஆண்டவர் நானே;␢ உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்;␢ நான் அதை நிரப்புவேன்.⁾ 11⁽ஆனால் என் மக்கள்␢ என் குரலுக்குச்␢ செவிசாய்க்கவில்லை;␢ இஸ்ரயேலர் எனக்குப்␢ பணியவில்லை.⁾
Alleluia

1 பேதுரு 1: 25

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 13: 54-58

54தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? 55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? 56இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். 57இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். 58அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.