ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

9 ஜூலை, 2027

Ordinary Weekday/ Augustine Zhao Rong, Priest, and Companions, Martyrs

Augustine Zhao Rong, Priest, and Companions, Martyrs
First Reading

தொடக்க நூல் 46: 1-7, 28-30

1பின்பு, இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். 2அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, “யாக்கோபு! யாக்கோபு!” என்று அழைத்தார். அவர், “இதோ அடியேன்” என்றார். 3கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். 4நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்” என்றார்.⒫ 5யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர். 6கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு, யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். 7தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.⒫ 28கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள். 29யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார். 30அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!” என்றார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 37: 3-4, 18-19, 27-28, 39-40

3⁽ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;␢ நாட்டிலேயே குடியிரு;␢ நம்பத் தக்கவராய் வாழ்.⁾ 4⁽ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;␢ உன் உள்ளத்து விருப்பங்களை␢ அவர் நிறைவேற்றுவார்.⁾ 18⁽சான்றோரின் வாழ்நாள்களை␢ ஆண்டவர் அறிவார்;␢ அவர்கள் உரிமைச் சொத்து␢ என்றும் நிலைத்திருக்கும்.⁾ 19⁽கேடுகாலத்தில்␢ அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை;␢ பஞ்ச காலத்திலும்␢ அவர்கள் நிறைவடைவார்கள்.⁾ 27⁽தீமையினின்று விலகு; நல்லது செய்;␢ எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.⁾ 28⁽ஏனெனில், ஆண்டவர்␢ நேர்மையை விரும்புகின்றார்;␢ தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;␢ அவர்களை என்றும் பாதுகாப்பார்.␢ பொல்லாரின் மரபினரோ␢ வேரறுக்கப்படுவர்.⁾ 39⁽நேர்மையாளருக்கு மீட்பு␢ ஆண்டவரிடமிருந்து வருகின்றது;␢ நெருக்கடியான நேரத்தில்␢ அவர்களுக்கு வலிமையும் அவரே.⁾ 40⁽ஆண்டவர் துணைநின்று␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ பொல்லாரிடமிருந்து␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,␢ அவர்களை மீட்கின்றார்.⁾
Alleluia

யோவான் 16: 13a, 14: 26d

13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.
Gospel

மத்தேயு 10: 16-23

16“இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். 17எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். 18என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். 19இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். 21சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். 22என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். 23அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.