ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

27 ஜூலை, 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

விடுதலைப் பயணம் 33: 7-11; 34: 5b-9, 28

7மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர். 8மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்றுகொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர். 9மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார். 10கூடார நுழை வாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழை வாயிலில் நின்றுகொண்டே மக்கள் அனைவரும் வணங்கித்தொழுவர். 11ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டகலாமல் இருப்பார். 5ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார்.⒫ 6அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில்,⁽“ஆண்டவர்! ஆண்டவர்!;␢ இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்;␢ சினம் கொள்ளத் தயங்குபவர்;␢ பேரன்புமிக்கவர்;␢ நம்பிக்கைக்குரியவர்.⁾ 7⁽ஆயிரம் தலைமுறைக்கும்␢ பேரன்பு செய்பவர்;␢ கொடுமையையும் குற்றத்தையும்␢ பாவத்தையும் மன்னிப்பவர்;␢ ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல்␢ தந்தையரின் கொடுமையைப்␢ பிள்ளைகள் மேலும்␢ பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும்,␢ மூன்றாம் நான்காம் தலைமுறைவரை␢ தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார்.⁾⒫ 8உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, 9“என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார். 28அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 103: 6-7, 8-9, 10-11, 12-13

6⁽ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;␢ ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்␢ அவர் உரிமைகளை வழங்குகின்றார்.⁾ 7⁽அவர் தம் வழிகளை␢ மோசேக்கு வெளிப்படுத்தினார்;␢ அவர் தம் செயல்களை␢ இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.⁾ 8⁽ஆண்டவர் இரக்கமும் அருளும்␢ கொண்டவர்;␢ நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.⁾ 9⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾ 10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾ 11⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾ 12⁽மேற்கினின்று கிழக்கு␢ எத்துணைத் தொலைவிலுள்ளதோ,␢ அத்துணைத் தொலைவிற்கு␢ நம் குற்றங்களை நம்மிடமிருந்து␢ அவர் அகற்றுகின்றார்.⁾ 13⁽தந்தை தம் பிள்ளைகள்மீது␢ இரக்கம் காட்டுவதுபோல்␢ ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது␢ இரங்குகிறார்.⁾
Gospel

மத்தேயு 13: 36-43

36அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர். 37அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: “நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; 38வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; 39அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். 40எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். 41மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்* நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; 42பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். 43அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”