வாசகங்கள்
29 ஜூலை, 2027
Martha, Disciple of the Lord Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
விடுதலைப் பயணம் 40: 16-21, 34-38
16மோசே அவ்வாறே செய்தார். ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.
17இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது.
18மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப்பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார். குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார்.
19திரு உறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
20உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார்.
21திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.
34பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.
35சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
36இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள்.
37மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
38ஏனெனில், பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 84: 3, 4, 5-6a and 8a, 11
3⁽படைகளின் ஆண்டவரே!␢ என் அரசரே! என் கடவுளே!␢ உமது பீடங்களில்␢ அடைக்கலான் குருவிக்கு␢ வீடு கிடைத்துள்ளது;␢ தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்␢ சிட்டுக் குருவிகளுக்குக்␢ கூடும் கிடைத்துள்ளது.⁾
4⁽உமது இல்லத்தில் தங்கியிருப்போர்␢ நற்பேறு பெற்றோர்;␢ அவர்கள் எந்நாளும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)⁾
5⁽உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்␢ பேறு பெற்றோர்;␢ அவர்களது உள்ளம் § சீயோனுக்குச் செல்லும்␢ நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.⁾
6⁽வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை␢ அவர்கள் கடந்து செல்கையில்,␢ அது நீருற்றுகள் உள்ள இடமாக␢ மாறுகின்றது;␢ முதல் பருவமழை அதனை␢ நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.⁾
8⁽படைகளின் ஆண்டவரே,␢ என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!␢ யாக்கோபின் கடவுளே,␢ எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)⁾
11⁽ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர்␢ நமக்குத் கதிரவனும்␢ கேடயமுமாய் இருக்கின்றார்;␢ ஆண்டவர் அருளையும்␢ மேன்மையையும் அளிப்பார்;␢ மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு␢ நன்மையானவற்றை வழங்குவார்.⁾
Alleluia
யோவான் 8: 12
12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel
யோவான் 11: 19-27 or Luke 10: 38-42
19சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
20இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
21மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
22இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார்.
23இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
24மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார்.
25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
27மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.