ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

24 ஜூலை, 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ Sharbel Makhluf, Priest

Sharbel Makhluf, Priest
First Reading

விடுதலைப் பயணம் 24: 3-8

3எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக; “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர். 4மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். 5அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். 6மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். 7அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர். 8அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 50: 1b-2, 5-6, 14-15

1⁽தெய்வங்களுக்கெல்லாம்␢ இறைவனாம்␢ ஆண்டவர் பேசினார்;␢ கதிரவன் எழும் முனையினின்று␢ மறையும் முனைவரை பரந்துள்ள␢ உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.⁾ 2⁽எழிலின் நிறைவாம் சீயோனின்று,␢ ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.⁾ 5⁽‛பலியிட்டு என்னோடு␢ உடன்படிக்கை செய்துகொண்ட␢ என் அடியார்களை␢ என்முன் ஒன்று கூட்டுங்கள்.’⁾ 6⁽வான்வெளி அவரது நீதியை␢ எடுத்தியம்பும்;␢ ஏனெனில், கடவுள்தாமே␢ நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)⁾ 14⁽கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்;␢ உன்னதர்க்கு உங்கள்␢ நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.⁾ 15⁽துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;␢ உங்களைக் காத்திடுவேன்;␢ அப்போது, நீங்கள் என்னை␢ மேன்மைப்படுத்துவீர்கள்.⁾
Alleluia

யாக்கோபு 1: 21bc

21எனவே, எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.
Gospel

மத்தேயு 13: 24-30

24இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். 25அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் 26பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. 27நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். 28அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். 29அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். 30அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்’ என்றார்.”