ஜூலை 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

6 ஜூலை, 2027

Ordinary Weekday/ Maria Goretti, Virgin, Martyr

Maria Goretti, Virgin, Martyr
First Reading

தொடக்க நூல் 32: 23-33

23அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார். 24யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார். 25யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது. 26அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார். 27ஆடவர், “உன் பெயர் என்ன?” என, 28அவர்: “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ‘இஸ்ரயேல்’* எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். 29யாக்கோபு அவரை நோக்கி “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர் “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார். 30அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் ‘பெனியேல்’* என்று பெயரிட்டார். 31அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார். 32அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 17: 1b, 2-3, 6-7ab, 8b and 15

1⁽ஆண்டவரே, என் வழக்கின்␢ நியாயத்தைக் கேட்டருளும்;␢ என் வேண்டுதலை உற்றுக் கேளும்;␢ வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்␢ என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.⁾ 2⁽உம் முன்னிலையினின்று␢ எனக்கு நீதி கிடைக்கட்டும்;␢ உம் கண்கள் நேரியன காணட்டும்.⁾ 3⁽என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;␢ இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;␢ என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;␢ தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;␢ என் வாய் பிழை செய்யக்கூடாதென␢ உறுதி கொண்டேன்.⁾ 6⁽இறைவா, நான் உம்மை நோக்கிக்␢ கூப்பிடுகின்றேன்; ஏனெனில், § நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.␢ என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;␢ என் விண்ணப்பத்திற்குச் § செவிசாய்த்தருளும்.⁾ 7⁽உமது வியத்தகு பேரன்பைக்␢ காண்பித்தருளும்;␢ உம்மிடம் அடைக்கலம் புகுவோரை␢ அவர்களுடைய எதிரிகளிடமிருந்து␢ உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!⁾ 8⁽உமது கண்ணின் மணியென␢ என்னைக் காத்தருளும்;␢ உம்முடைய சிறகுகளின் நிழலில்␢ என்னை மூடிக்கொள்ளும்.⁾ 15⁽நானோ நேர்மையில் நிலைத்திருந்து␢ உமது முகம் காண்பேன்;␢ விழித்தெழும்போது,␢ உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.⁾
Alleluia

யோவான் 10: 14

14❮14-15❯நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
Gospel

மத்தேயு 9: 32-38

32அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். 33பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். 34ஆனால், பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர். 35இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். 36திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். 37அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. 38ஆகையால், தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.