வாசகங்கள்
8 ஜூலை, 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
தொடக்க நூல் 44: 18-21, 23b-29; 45: 1-5
18யூதா அவர் அருகில் வந்து, “என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர்.
19என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், “உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா?” என்று கேட்டீர்கள்.
20அதற்கு நாங்கள், “எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார்” என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம்.
21அப்பொழுது தாங்கள், “அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்” என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
23அதற்குத் தாங்கள் “உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம்” என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
24உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம்.
25பிறகு எங்கள் தந்தை, “நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப்பொருள் வாங்கி வாருங்கள்” என்றார்.
26நாங்கள் “எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம்” என்றோம்.
27உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் “என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாளென்று உங்களுக்குத் தெரியும்.
28ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை.
29இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாகிப் பாதாளத்திற்குள் இறங்கச்செய்வீர்கள்” என்றார்.
1அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், “எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள்” என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை.
2உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
3பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, “நான் தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டார். ஆனால், அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகிலடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
4ஆனால், யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், “நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்!
5நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 105: 16-17, 18-19, 20-21
16⁽நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;␢ உணவெனும் ஊன்றுகோலை␢ முறித்துவிட்டார்.⁾
17⁽அவர்களுக்கு முன் ஒருவரை␢ அனுப்பிவைத்தார்;␢ யோசேப்பு என்பவர்␢ அடிமையாக விற்கப்பட்டார்.⁾
18⁽அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு␢ அவரைத் துன்புறுத்தினர்.␢ அவர்தம் கழுத்தில்␢ இரும்புப் பட்டையை மாட்டினர்.⁾
19⁽காலம் வந்தது;␢ அவர் உரைத்தது நிறைவேறிற்று;␢ ஆண்டவரின் வார்த்தை␢ அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.⁾
20⁽மன்னர் ஆளனுப்பி␢ அவரை விடுதலை செய்தார்;␢ மக்களினங்களின் தலைவர்␢ அவருக்கு விடுதலை அளித்தார்;⁾
21⁽அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்␢ தலைவர் ஆக்கினார்;␢ தம் உடைமைகளுக்கெல்லாம்␢ பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.⁾
Alleluia
மாற்கு 1: 15
15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
Gospel
மத்தேயு 10: 7-15
7அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.
8நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
9பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
10பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.
11நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.
12அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
13வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
14உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
15தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.