ஆகஸ்ட் 2027

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

6 ஆகஸ்ட், 2027

Transfiguration of the Lord Feast

அன்றைய திருப்பலி
First Reading

தானியேல் 7: 9-10, 13-14

9நான் பார்த்துக் கொண்டிருக்கையில்,⁽அரியணைகள் அமைக்கப்பட்டன;␢ தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்;␢ அவருடைய ஆடை வெண்பனி போலவும்,␢ அவரது தலைமுடி␢ தூய பஞ்சு போலவும் இருந்தன;␢ அவருடைய அரியணை␢ தீக்கொழுந்துகளாயும்␢ அதன் சக்கரங்கள்␢ எரி நெருப்பாயும் இருந்தன.⁾ 10⁽அவர் முன்னிலையிலிருந்து␢ நெருப்பாலான ஓடை தோன்றிப்␢ பாய்ந்தோடி வந்தது;␢ பல்லாயிரம் பேர்␢ அவருக்குப் பணிபுரிந்தார்கள்.␢ பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்;␢ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது;␢ நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.⁾⒫ 13⁽இரவில் நான் கண்ட காட்சியாவது:␢ வானத்தின் மேகங்களின் மீது␢ மானிட மகனைப் போன்ற␢ ஒருவர் தோன்றினார்;␢ இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில்␢ அவர் வந்தார்;␢ அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.⁾ 14⁽ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும்␢ அவருக்கு கொடுக்கப்பட்டன;␢ எல்லா இனத்தாரும்␢ நாட்டினரும் மொழியினரும்␢ அவரை வழிபட வேண்டும்;␢ அவரது ஆட்சியுரிமை␢ என்றுமுளதாகும்;␢ அதற்கு முடிவே இராது;␢ அவரது அரசு அழிந்து போகாது.⁾⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 97: 1-2, 5-6, 9

1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾ 2⁽மேகமும் காரிருளும்␢ அவரைச் சூழ்ந்துள்ளன;␢ நீதியும் நேர்மையும்␢ அவரது அரியணையின் அடித்தளம்.⁾ 5⁽ஆண்டவர் முன்னிலையில், § அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,␢ மலைகள் மெழுகென உருகுகின்றன.⁾ 6⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾ 9⁽ஏனெனில், ஆண்டவரே!␢ உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலானவர் நீரே!⁾
Second Reading

2 பேதுரு 1: 16-19

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

மத்தேயு 17: 5c

5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
Gospel

மாற்கு 9: 2-10

2ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். 3அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. 4அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். 5பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். 6தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். 7அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. 8உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.⒫ 9அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். 10அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, “இறந்து உயிர்த்தெழுதல்” என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.