வாசகங்கள்
8 ஆகஸ்ட், 2027
Nineteenth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
1 அரசர்கள் 19: 4-8
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 34: 2-3, 4-5, 6-7, 8-9
2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾
3⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾
4⁽துணைவேண்டி நான் ஆண்டவரை␢ மன்றாடினேன்; அவர் எனக்கு␢ மறுமொழி பகர்ந்தார்;␢ எல்லா வகையான அச்சத்தினின்றும்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾
5⁽அவரை நோக்கிப் பார்த்தோர்␢ மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;␢ அவர்கள் முகம்␢ அவமானத்திற்கு உள்ளாகவில்லை.⁾
6⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾
7⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾
8⁽ஆண்டவர் எத்துணை இனியவர் என்று␢ சுவைத்துப் பாருங்கள்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ பேறுபெற்றோர்.⁾
9⁽ஆண்டவரின் தூயோரே,␢ அவருக்கு அஞ்சுங்கள்;␢ அவருக்கு அஞ்சுவோர்க்கு␢ எக்குறையும் இராது.⁾
Second Reading
எபேசியர் 4: 30 - 5: 2
30கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.
31மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.
32ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.
1ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.
2கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.⒫
Alleluia
யோவான் 6: 51
51“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
Gospel
யோவான் 6: 41-51
41‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே’ என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.
42“இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படி சொல்லலாம்?” என்று பேசிக்கொண்டார்கள்.
43இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.
44என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
45⁽‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’⁾ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.
46கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.
47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
48வாழ்வுதரும் உணவு நானே.
49உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.
50உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
51“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”