ஆகஸ்ட் 2027

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

15 ஆகஸ்ட், 2027

Assumption of the Blessed Virgin Mary Solemnity / Vigil

Day
First Reading

திருவெளிப்பாடு 11: 19a; 12: 1-6a, 10ab

19அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின. 1வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். 2அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார். 3வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. 4அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது. 5எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. 6அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.⒫ 10பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது:⁽“இதோ, மீட்பு, வல்லமை,␢ நம் கடவுளின் ஆட்சி,␢ அவருடைய மெசியாவின் அதிகாரம்␢ ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.␢ நம் சகோதரர் சகோதரிகள் மீது␢ குற்றம் சுமத்தியவன்,␢ நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும்␢ அவர்கள்மீது குற்றம் சாட்டியவன்␢ வெளியே தள்ளப்பட்டான்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 45: 10, 11, 12, 16

10⁽கேளாய் மகளே! கருத்தாய்க்␢ காதுகொடுத்துக் கேள்!␢ உன் இனத்தாரை மறந்துவிடு;␢ பிறந்தகம் மறந்துவிடு.⁾ 11⁽உனது எழிலில்␢ நாட்டங்கொள்வார் மன்னர்;␢ உன் தலைவர் அவரே;␢ அவரைப் பணிந்திடு!⁾ 12⁽தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;␢ செல்வமிகு சீமான்கள்␢ உன்னருள் வேண்டி நிற்பர்.⁾ 16⁽உம் தந்தையரின் அரியணையில்␢ உம் மைந்தரே வீற்றிருப்பர்;␢ அவர்களை நீர் உலகுக்கெலாம்␢ இளவரசர் ஆக்கிடுவீர்.⁾
Second Reading

1 கொரிந்தியர் 15: 20-27

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 1: 39-56

39அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். 41மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 45ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். 46⦅அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:⦆ 47⁽“ஆண்டவரை எனது உள்ளம்␢ போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.␢ என் மீட்பராம் கடவுளை நினைத்து␢ எனது மனம் பேருவகை கொள்கின்றது.⁾ 48⁽ஏனெனில், அவர் தம் அடிமையின்␢ தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.␢ இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்␢ என்னைப் பேறுபெற்றவர் என்பர்.⁾ 49⁽ஏனெனில், வல்லவராம் கடவுள்␢ எனக்கு அரும்பெரும் செயல்கள்␢ செய்துள்ளார்.␢ தூயவர் என்பதே அவரது பெயர்.⁾ 50❮50-53❯⁽அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்␢ தலைமுறை தலைமுறையாய் அவர்␢ இரக்கம் காட்டி வருகிறார்.␢ அவர் தம் தோள் வலிமையைக்␢ காட்டியுள்ளார்;␢ உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்␢ சிதறடித்து வருகிறார்.␢ வலியோரை அரியணையினின்று␢ தூக்கி எறிந்துள்ளார்;␢ தாழ்நிலையில் இருப்போரை␢ உயர்த்துகிறார்.␢ பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;␢ செல்வரை வெறுங்கையராய்␢ அனுப்பிவிடுகிறார்.⁾ 51Same as above 52Same as above 53Same as above 54❮54-55❯⁽மூதாதையருக்கு உரைத்தபடியே␢ அவர் ஆபிரகாமையும்␢ அவர்தம் வழி மரபினரையும்␢ என்றென்றும் இரக்கத்தோடு␢ நினைவில் கொண்டுள்ளார்;␢ தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்␢ துணையாக இருந்து வருகிறார்”.⁾⒫ 55Same as above 56மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
Vigil
First Reading

1 குறிப்பேடு 15: 3-4, 15-16; 16: 1-2

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 132: 6-7, 9-10, 13-14

6⁽திருப்பேழை எப்ராத்தாவில்␢ இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;␢ வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.⁾ 7⁽“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்!␢ வாருங்கள்;␢ அவரது திருவடிதாங்கி␢ முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.⁾ 9⁽உம் குருக்கள் நீதியை␢ ஆடையென அணிவார்களாக!␢ உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!⁾ 10⁽நீர் திருப்பொழிவு செய்த அரசரை,␢ உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்␢ புறக்கணியாதேயும்.⁾ 13⁽ஆண்டவர் சீயோனைத்␢ தேர்ந்தெடுத்தார்;␢ அதையே தம்␢ உறைவிடமாக்க விரும்பினார்.⁾ 14⁽“இது என்றென்றும்␢ நான் இளைப்பாறும் இடம்;␢ இதை நான் விரும்பினதால்␢ இதையே என் உறைவிடமாக்குவேன்.⁾
Second Reading

1 கொரிந்தியர் 15: 54b-57

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

லூக்கா 11: 28

28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
Gospel

லூக்கா 11: 27-28

27அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார். 28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.