ஆகஸ்ட் 2027

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

3 ஆகஸ்ட், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

எண்ணிக்கை 12: 1-13

1மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். 2அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். 3பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார். 4உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்” என்றார். அவர்கள் மூவரும் வந்தனர். 5மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர். 6அவர் கூறியது: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன். 7ஆனால், என்அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; 8நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர், ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை? 9மேலும், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார்.⒫ 10கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார். 11ஆரோன் மோசேயிடம், “என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்; 12தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக்குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்” என்றார். 13மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, “கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்” என்றார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 51: 3-4, 5-6ab, 6cd-7, 12-13

3⁽ஏனெனில், என் குற்றங்களை␢ நான் உணர்கின்றேன்;␢ என் பாவம் எப்போதும்␢ என் மனக்கண்முன் நிற்கின்றது.⁾ 4⁽உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;␢ உம் பார்வையில் தீயது செய்தேன்;␢ எனவே, உம் தீர்ப்பினால்␢ உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;␢ உம் தண்டனைத் தீர்ப்பில்␢ நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.⁾ 5⁽இதோ! தீவினையோடு␢ என் வாழ்வைத் தொடங்கினேன்;␢ பாவத்தோடே என் அன்னை␢ என்னைக் கருத்தாங்கினாள்.⁾ 6⁽இதோ! நீர் விரும்புவது␢ உள்ளத்து உண்மையையே;␢ மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.⁾ 7⁽ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்;␢ நான் தூய்மையாவேன்.␢ என்னைக் கழுவியருளும்;␢ உறைபனியிலும் வெண்மையாவேன்.⁾ 12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾ 13⁽அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு␢ உம் வழிகளைக் கற்பிப்பேன்;␢ பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.⁾
Alleluia

யோவான் 1: 49b

49நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
Gospel

மத்தேயு 14: 22-36 or மத்தேயு 15: 1-2, 10-14

22இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். 23மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். 24அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. 25இரவின் நான்காம் காவல்வேளையில்* இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். 27உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.⒫ 28பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். 29அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். 30அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். 31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார். 32அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. 33படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர். 34அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள். 35இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். 36அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.