வாசகங்கள்
27 ஆகஸ்ட், 2027
Monica, Married Woman Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
1 தெசலோனிக்கர் 4: 1-8
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 97: 1 and 2b, 5-6, 10, 11-12
1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾
2⁽மேகமும் காரிருளும்␢ அவரைச் சூழ்ந்துள்ளன;␢ நீதியும் நேர்மையும்␢ அவரது அரியணையின் அடித்தளம்.⁾
5⁽ஆண்டவர் முன்னிலையில், § அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,␢ மலைகள் மெழுகென உருகுகின்றன.⁾
6⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾
10⁽தீமையை வெறுப்போர்மீது␢ ஆண்டவர் அன்புகூர்கின்றார்.␢ அவர்தம் பற்றுமிகு அடியார்களின்␢ உயிரைப் பாதுகாக்கின்றார்;␢ பொல்லாரின் கையினின்று␢ அவர்களை விடுவிக்கின்றார்.⁾
11⁽நேர்மையாளருக்கென ஒளியும்␢ நேரிய உள்ளத்தோர்க்கென␢ மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.⁾
12⁽நேர்மையாளர்களே!␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ அவரது தூய்மையை நினைந்து␢ அவரைப் புகழுங்கள்.⁾
Alleluia
லூக்கா 21: 36
36ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
Gospel
மத்தேயு 25: 1-13
1“அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
2அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.
3அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால், தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
4முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
5மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
6நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது.
7மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
8அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள்.
9முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.
10அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
11பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.
12அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார்.
13எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில், அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”