வாசகங்கள்
9 ஆகஸ்ட், 2027
Ordinary Weekday/ Teresa Benedicta of the Cross, Virgin, Martyr
Teresa Benedicta of the Cross, Virgin, Martyr
First Reading
இணைச் சட்டம் 10: 12-22
12எனவே, இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து,
13உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?
14விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன.
15இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார்.
16ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்.
17ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை.
18அநாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அந்நியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.
19அந்நியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியராய் இருந்தீர்கள்.
20உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள்.
21அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே.
22உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 147: 12-13, 14-15, 19-20
12⁽எருசலேமே!␢ ஆண்டவரைப் போற்றுவாயாக!␢ சீயோனே!␢ உன் கடவுளைப் புகழ்வாயாக!⁾
13⁽அவர் உன் வாயில்களின் தாழ்களை␢ வலுப்படுத்துகின்றார்;␢ உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு␢ ஆசி வழங்குகின்றார்.⁾
14⁽அவர் உன் எல்லைப்புறங்களில்␢ அமைதி நிலவச் செய்கின்றார்;␢ உயர்தரக் கோதுமை வழங்கி␢ உன்னை நிறைவடையச் செய்கின்றார்.⁾
15⁽அவர் தமது கட்டளையை␢ உலகினுள் அனுப்புகின்றார்;␢ அவரது வாக்கு␢ மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.⁾
19⁽யாக்கோபுக்குத் தமது வாக்கையும்␢ இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்␢ நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.⁾
20⁽அவர் வேறெந்த இனத்துக்கும்␢ இப்படிச் செய்யவில்லை;␢ அவருடைய நீதிநெறிகள்␢ அவர்களுக்குத் தெரியாது;␢ அல்லேலூயா!⁾
Alleluia
2 தெசலோனிக்கர் 2: 14
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மத்தேயு 17: 22-27
22கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.
23அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.
24அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா* தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.
25அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார்.
26“மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.
27ஆயினும், நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே, நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக்* காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.