ஆகஸ்ட் 2027

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

30 ஆகஸ்ட், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

1 தெசலோனிக்கர் 4: 13-18

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 96: 1 and 3, 4-5, 11-12, 13

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾ 3⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾ 4⁽ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;␢ பெரிதும் போற்றத் தக்கவர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக␢ அஞ்சுதற்கு உரியவர் அவரே.⁾ 5⁽மக்களினங்களின் தெய்வங்கள்␢ அனைத்தும் வெறும் சிலைகளே;␢ ஆண்டவரோ␢ விண்ணுலகைப் படைத்தவர்.⁾ 11⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾ 12⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾ 13⁽ஏனெனில் அவர் வருகின்றார்;␢ மண்ணுலகிற்கு␢ நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;␢ நிலவுலகை நீதியுடனும்␢ மக்களினங்களை உண்மையுடனும்␢ அவர் தீர்ப்பிடுவார்.⁾
Alleluia

லூக்கா 4: 18

18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
Gospel

லூக்கா 4: 16-30

16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். 17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: 18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾ 19⁽ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை␢ முழக்கமிட்டு அறிவிக்கவும்␢ அவர் என்னை அனுப்பியுள்ளார்.”⁾⒫ 20பின்னர், அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. 21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். 22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். 23அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். 24ஆனால், நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 25உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். 26ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். 27மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.⒫ 28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; 29அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.